ஆரோக்கிய சமையல் : வாழைத்தண்டு சீஸ்பால்

சமையல் புதிது பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
vazhai thandu 1 - 2026

வாழைத்தண்டு சீஸ்பால்:.

தேவையானப் பொருட்கள்:

வேகவைத்து உரித்து மசித்த உருளைக்கிழங்கு – 2,
வாழைத்தண்டு – பாதி (நறுக்கி நார் எடுத்தது),
நறுக்கிய பெரிய வெங்காயம் – 2,
பச்சைமிளகாய் – 2,
தேங்காய்த்துருவல் – 1 கைப்பிடி,
முந்திரிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,
மொசெரேலா சீஸ் – 1 கப்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,
சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
சோள மாவு – 1/2 கப்,
வறுத்த சேமியா – 1 கப்,
தக்காளி சாஸ், மயனைஸ் – தேவைக்கு.

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், வாழைத்தண்டு, தேங்காய்த்துருவல், முந்திரிப்பருப்பு, பச்சைமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கரம்மசாலா தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். சிறிது தண்ணீரில் சோள மாவை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும். உருளைக்கிழங்கு கலவையை ஒரு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து தட்டவும்.

அதில் ஒரு துண்டு மொசெரேலா சீஸை எடுத்து நடுவில் வைத்து உருண்டையை சோளமாவு கலவையில் தோய்த்து வறுத்த சேமியாவில் புரட்டி எடுக்கவும். எண்ணெயை சூடாக்கி உருண்டையை பொன்னிறமாக பொரித்தெடுத்து, தக்காளி சாஸ் மற்றும் மயனைஸுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.