தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி: ஒரு நடிகர்!

Published:

HRaja Tanjore temple kumbabishekam - 2026

இன்று தஞ்சாவூர் பெருவுடையார்கோயிலில் குடமுழுக்கு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெறத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது தமிழக அரசு! ஆனால் அரசின் சார்பில் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலந்து கொள்ளவில்லை. முதல்வரோ, துணைமுதல்வரோ இங்கிருக்கும் செண்டிமெண்ட்டை வைத்து மூச்சுக்கூட விடவில்லை.

அதே நேரம் பாஜக., தேசிய செயலர் ஹெச்ராஜா, தாம் கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டு டிவிட் செய்தார்.
அவரது டிவிட்டர் பதிவில்…

இன்று #தஞ்சைபெரியகோவில் #கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அதில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம்.
கும்பாபிஷேகத்தையும் பிறகு அபிஷேகமும் தீபமும் பார்க்கின்ற மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

#TanjoreBigTemple – என்று குறிப்பிட்டுள்ளார்.

புதியபாதை நடிகர் பார்த்திபன், முன்னதாகவே டிவிட்டர் பதிவில் தாம் கோயில் குடமுழுக்கில் கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று அவர் தாம் குடமுழுக்கில் கலந்து கொண்டு, விடியோவை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

திரையுலகிலிருந்து நான் மட்டுமே … நான் புறமும் நோக்க! என்று தமது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு வாழ்த்து சொல்லி, ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img