ஆசையாய், அழகாய் வளர்த்ததை அள்ளிக் கொடுத்த கல்லூரி மாணவிகள்! 1300 பேர் செய்த அருஞ்செயல்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் திருச்சி பொது தகவல்கள்
hair for cancer pas - 2026

கூந்தல் ஒரு பெண்ணுக்கு மிகுந்த அழகை தரக்கூடியது அத்தகைய கூந்தலை பெண்கள் இழக்க சம்மதிப்பதில்லை. இறைவனுக்கு காணிக்கை கொடுக்க மட்டுமே அதை எடுப்பார்கள் அதுவும் பெரும்பாலும் நடுத்தர வயதினரும் சிறு குழந்தைகளும் மட்டுமே காணமுடியும்

இளம் பெண்கள் கல்லூரி பயிலும் பெண்கள் அதனை இழக்க சம்மதித்து அதனை புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க முன் வந்திருப்பது சிறப்பு இளம் சமுதாயத்தினரிடம் உள்ள மனிதநேயம் மற்றும் உதவும் மனப்பாங்கு எத்தகையாதாக உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு நிகழ்வாகும்

புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் பிப்.4 ஆம் தேதி புற்றுநோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

hair for cancer - 2026

இந்த தினத்தன்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, விக் தயாரிக்கும் நிறுவனங்கள் பெண்களிடம் முடியைத் தானமாகப் பெறுவர். அதே போல, நேற்று திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் முடி தானமாகக் கொடுக்கும் நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்றது. அதில், சுமார் 1300 மாணவிகள் தங்கள் முடியைத் தானமாகக் கொடுத்துள்ளனர்.

இது குறித்த பேசிய அந்த தனியார் நிறுவன அதிகாரி, ‘புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் சம்மதத்துடன் பிப்.4 ஆம் தேதி முதல் மார்ச்.4 ஆம் தேதி வரை முடியைத் தானமாகப் பெற்று அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விக் செய்து இலவசமாகக் கொடுத்து வருகிறோம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் முடியைத் தலைமுடி தானம் பெறும் நிகழ்ச்சி நடாத்தியுள்ளோம். ஆனால் திருச்சியில் நடத்துவது இதுவே முதன் முறை. குறைந்த பட்சம் 10இன்ச் முடியைத் தானமாக பெறுகிறோம்” என்று கூறினார். நல்ல நோக்கத்திற்கு முடியைக் கொடுப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.