
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக அரசின் வருவாய் ரூ.1.81 லட்சம் கோடி, செலவு ரூ. 2.04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.,
2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிதிஒதுக்கீடு அம்சங்கள் சில…
தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி.
பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,227 கோடி.
பால்வளத்துறைக்கு ரூ. 130 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.71 கோடி ஒதுக்கீடு.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.786 கோடி ஒதுக்கீடு.
வடசென்னைக்கான வெள்ள தடுப்பு மேலாண்மைக்கு ரூ.3,243 கோடியில் திட்டம் தயாரிப்பு.
தஞ்சை தமிழ் பல்கலை.யில் தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்பட்டு, ஆண்டு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்.
நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி ரூ.1500-லிருந்து, ரூ.2 ஆயிரமாக உயர்வு.
காவல்துறைக்கு ரூ.7,877 கோடி ஒதுக்கீடு. காவல்துறைக்காக 35 கட்டடங்கள், 15 காவல் நிலையங்கள், 543 குடியிருப்புகள் கட்டப்படும்.
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு.
கடலூர், மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும்.
நபார்டு வங்கி உதவியுடன், ரூ.200 கோடியில் 70 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.



