முதலமைச்சருக்கான மரியாதை, பயம் துளிக்கூட இல்லையே! என்ன அதிகாரிகளோ!?

சற்றுமுன் தமிழகம் திருச்சி புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
Screenshot 20200305 115026 WhatsApp - 2026

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சில நிமிடங்களில் கரூர் வரும் நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைக்கு வண்ணம் பூசும் காட்சி முதல்வர் வருகை ஆங்காங்கே துரிதப்படுத்தி கடந்த 10 தினங்களாக அதிமுக கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஒரு சில துறைகள் முடங்கிய நிலையில் அதற்கு முதல் எடுத்துக்காட்டாக நெடுஞ்சாலைத்துறை விளங்குகின்றது கரூர் அடுத்த திருமாநிலையூர் பகுதியில் இருந்து சுங்ககேட் சாலை வரை உள்ள வேகத்தடைகள் வெள்ளை நிற வர்ணம் பூசும் பணி தற்போது நடைபெறுவது அதிமுகவினர் முகம் சுளித்து உள்ளனர்

மேலும் தமிழக முதல்வர் வருகை சில மணித்துளிகளில் இருக்கும் நிலையில் தற்போது பட்டி டிங்கரிங் பார்க்கும் நிலை முதல்வர் வருகையை புறக்கணிக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை ஈடுபடுவதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

காவல் துறையினருக்கு இருக்கும் அக்கறை கரூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு இல்லை

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் கரூர் வர உள்ள நிலையில், கரூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்லும் சாலை நடுவே போடப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பிகள் அப்படியே நடுரோட்டில் போடப்பட்டிருந்தன.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இந்நிலையில், இந்நிலையில் காந்திகிராமம் அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழாவை முடித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார்

ஆனால் தான்தோன்றிமலை பகுதியில் சாலையின் குறுக்கே போடப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பிகள் நடு ரோட்டிலேயே போடப்பட்டிருந்தன நகராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறையினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மாற்றம் மாவட்ட காவல்துறையினர் அதை தாங்களே அப்புறப்படுத்தும் காட்சி வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.