
சென்னையில் வீசும் காற்றில் விஷம் காணப்படுவதாக மாசுகட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஆண்டுதோறும் காற்று மாசு குறித்த அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டின் காற்று மாசு குறித்த அறிக்கையில் இந்த விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக சென்னையில் மரங்கள், கடற்கரைக்கு அருகே இருக்கும் பகுதி என்பதால் காற்றின் தரநிலை சற்று சிறப்பாக இருந்து வரும்.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்துக்கும் கடந்த மாரச் மாதத்த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடையாற்றிலும், காற்றின் தரநிலை மிக மோசமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் கண்காணித்து வரும் 28 காற்று தரநிலை கட்டுபாட்டு நிலையங்களிலும் சல்பர் டையாக்சைட், நைட்ரஜன் டையாக்சைட் ஆகியவற்றின் வருடாந்திர சராசரி மதிப்புகள் கட்டுபாட்டுக்குள் இருந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் வெளியாகியுள்ள மணற்துகள்கள், வாகனப் புகை போன்றவற்றால் காற்றில் துகள்களின் விகிதமும் கணிசமாக உயா்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் அடையார், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் ஆகிய ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் சோதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. .



