ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
rajini 1 - 2026

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.

இந்நிலையில் ரஜினி தலைமையில் இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .

rajini 1 1 - 2026

இதற்காக மாவட்டச் செயலாளர்கள் 38 பேர் சென்னைக்கு புறப்பட்டு வருமாறு தொலைபேசியில் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் 3 அல்லது 5 மாவட்டங்களுக்கு ஒரு மாநில பொறுப்பாளர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

rajini 4 - 2026

முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்தியில் ஒற்றுமையில்லாததால் பிரச்னை ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் தான் ரஜினி இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.