தமிழக பொருளாதாரத்தை நிற்க வைக்கப்போகும் குடிமகன்களை… அமர வைத்து கௌரவம் அளித்த அரசு!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
tasmac sengottai
tasmac sengottai

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடை விற்பனை இன்று காலை தொடங்கியது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் தொங்க விடப் பட்டிருந்தன.

ஒலிபெருக்கி மூலமாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சம்பந்தமாக தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு கொண்டே இருந்தன.! மது பிரியர்கள் வந்தவுடன் அவர்கள் வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அவர்கள் வரிசையாக போடப் பட்டிருந்த சேர்களில், மிகவும் பாதுகாப்பாக நிழல் தரும் கூரையின் கீழ் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.!

அங்கு அவர்களுடைய ஆதார் கார்டு முக கவசம் சரி பார்க்கப்பட்டது. பின்னர், கிருமி நாசினி மூலமாக கைகளை கழுவச் செய்து டோக்கன் வழங்கப்பட்டது ..

பிறகு மதுபானக் கடைக்குள் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளுக்கு இடையே சமூக இடைவெளி விட்டு நின்று வரிசையாக மதுபானங்களை வாங்கி சென்றார்கள்..!

தமிழகத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி நிமிர வைக்கப் போகும் குடிமகன்களுக்கு இன்று சேர் போட்டு அமர வைத்து மதுபானங்களை வாங்கிச் செல்ல உறுதுணையாக இருந்தது அரசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.