Homeஅடடே... அப்படியா?சிலம்புச் செல்வரின் பிறந்த நாள் இன்று!

சிலம்புச் செல்வரின் பிறந்த நாள் இன்று!

ma po si
ma po si
 • இன்று சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்த நாள்.
 • மேலவையும் மபொசியும்

இந்தியாவிலே மத்தியிலும் மாநிலங்களிலும் பூரண சுதந்திரம் மலர்ந்தது 1947 ஆகஸ்டுப் பதினைந்தில் ஆகும். ஆனால், இதற்கு முன்னோடியாக மாநிலங்களிலே அரைகுறையாகவேனும் சுயாட்சி மலர்ந்தது 1920 ஆகும்.

“மாண்டேகு – செம்ஸ்போர்டு திட்டம்” என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு வழங்கிய அரசியல் சீர்திருத்தத்தின் விளைவக அப்போதைய சென்னை,பம்பாய்,கல்கத்தா(வங்காளம்) மாநிலங்களிலே சட்டமன்றத்தோடும் கூடிய சுயாட்சி மலர்ந்தது.

அப்போது தமிழ் – தெலுங்கு – கன்னடம்- மலையாளம் ஆகிய நான்கு மொழிப் பிரதேச்ங்களைக் கொண்ட சென்னை ராஜ்யம் தனக்கென சட்டம்ன்றத்தையும் அமைச்சரவையும் பெற்றது. அந்த சட்ட மன்றம் “லெஜிஸ்லேடிவ் கவுன்சில்” என்னும் ஆங்கிலப்பெயரால்அழைக்கப்பட்டது.

அதன் பின்னர்,”1935 என்னும் பெயரிலே பிரிட்டிஷ் பார்லிமெண்டால் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தின் வாய்லாக சென்னை – பம்பாய் – வங்காளம் ஆகியபலமான நிலங்களிலே இரண்டு அவைகளை உருவாக்கும் சட்டமானது 1937ல் நடை முறைக்கு வந்தது.

பழைய லெஜிஸ் லேடிவ் கவுன்சிலானது, அந்தப் பெயராலேயே “மேலவை” யாக நீடித்தது.“லெஜிஸ் லேடிவ் அசெம்பிளி” என்னும் பெயரிலே “கீழ் அவை” ஒன்றும் புதிதாகப் பிறந்தது!

1937ல் தொடங்கி 1986 அக்டோபர் வரை நமது மாநிலத்தில் இரண்டு அவைகள் இயங்கிவந்தன. ஆனால், தமிழக சட்டப் பேரவை 15-05-86ல் நிறைவேற்றிய தீர் மானப்படி, நாடாளு மன்றத்திலே சட்டமியற்றப்பட்டு, 31-10-86ல் தமிழக மேலவை கலைக்கப்பட்டது.

mpc
mpc

1920 ஆம் ஆண்டு வரை அதாவது, தொடர்ந்து 66 ஆண்டுக் காலம் இயங்கி வந்த மேலவையின் தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்கள்:

 • பி.இராசகோபாலாச்சாரி 1920—23
 • எல்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளை1924-25
 • எம்.ரத்தினசாமி1925-26
 • சி.வி.எஸ்.நரசிம்மராசு1946-30
 • பி.ராமச்சந்திர ரெட்டி 1930-37
 • டாக்டர் யு.ராமராவ் 1937-46
 • ஆர்.பி.ராமகிருஷ்ணராசு1946-52
 • டாக்டர் பி.வி.செரியன் 1952-64
 • சிந்தனைச் சிற்பி சி பி சிற்றரசு 1970-76
 • ம.பொ.சிவஞானம் 1978-86

இவர்களில் அதிக ஆண்டுகள் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் டாக்டர் பி.வி.செரியன், டாக்டர் ம.பொ.சிவஞானம் ஆகிய இருவருமாவர்.
துணைத்தலைவராக ஆறு ஆண்டுகள் பதவி வகித்து அடுத்து சுமார் 9 ஆண்டு காலம் தலைமைபதவியிலிருந்தார்
ம.பொ.சி.19452 முதல் 1954 வரை மேலவையின் உறுப்பினராகவும் துணைக் கொரடாவாகவும் ம.பொ.சி. இருந்தார். ஆக, கலைக்கப்பட்ட மேலவையுடன் ம.பொ.சி.க்கிருந்த தொடர்பு 17 ஆண்டு காலமாகும்.

மேலவை கலைக்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் அடியேன் வழக்கு தொடுத்தேன்(வழக்கு எண் WP no 4399/2000) உயர் நீதி மன்றம் மேலவைஅமையஆணையை வழங்கியது. ஆனால்ஆட்சியாளரால் பாழ் பட்டது.

 • கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (வழக்கறிஞர், செய்தித் தொடர்பாளர், திமுக.,)

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,114FansLike
377FollowersFollow
73FollowersFollow
74FollowersFollow
3,360FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பிரேவ்’க்கு பின்னர்25 வருடங்களுக்கு கழித்து படம் இயக்கும் ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் ..

ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் 'தி பிரேவ்'க்கு பின்னர் 25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும்...

ஐமேக்ஸ் தொழில்நுட்ப த்தில் வெளியாகவுள்ளபொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -பாகம்1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம்...

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

Latest News : Read Now...