கொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்! குவிந்த பாராட்டுகள்!

Published:

madurai subramaniapuram inspector kalaivani
madurai subramaniapuram inspector kalaivani

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.

மதுரை மாநகர சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி. இவர் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதும் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மதுரை கோவலன் நகர் மற்றும் டிவிஎஸ் நகர் ராஜம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கவசம் அணியாமல் வந்து கொண்டிருந்த பொது மக்களிடையே இலவசமாக பேஸ்மாஸ்க் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார் .

மேலும் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், முக கவசம் அணியாமல் வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் நோய்த்தொற்றின் தீவிரத்தையும் அப்பகுதி மக்களிடையே விளக்கிக் கூறினார்

இதனைத் தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார், இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அவரது விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img