வானத்திலே யோகா பண்ணுதோ? அசையாமல் நடுவானில் நின்ற பறவை!

Published:

dove

வானில் பறந்துகொண்டிருந்தபோது பறவை ஒன்று சில நிமிடங்கள் அசைவற்று இருந்தது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலு 9ம் தேதி கொலம்பியா பகுதியில் துலுவா வேலி என்ற பகுதியில் வெள்ளைப் புறா பறந்துகொண்டிருக்கும்போது திடீரென்று அசைவற்று இருந்துள்ளது. அதன் சிறகுகள் விரித்தபடி சில நிமிடங்கள வானில் மிதந்ததால், அதனைப் பார்த்த அப்பகுதியினர் ஆச்சரியமடைந்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புறா அசைவற்று இருந்த இடத்திற்கு அருகே ஒரு 5G டவர் இருக்கிறது. ஏதாவது மெல்லிய கம்பியில் அந்த புறா சிக்கியிருக்கிறதா எனவும் அப்பகுதியினர் பார்த்துள்ளனர். ஆனால், கம்பி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பறந்துகொண்டிருக்கும்போது புறா எவ்வாறு திடீரென உறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் என இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

dove-1

அந்த வீடியோவை டெசபெட்ரோஸ்கி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை இதுவரை 3 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும், இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது எனவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய UFO நிபுணர், ஸ்காட் சி வேரிங், வீடியோவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்க முயன்றார், அவரைப் பொறுத்தவரை இது phenomenon of missing time என்று விளக்குகிறார். இதுகுறித்து பேசியபோது,”5ஜி டவரின் அருகே ஒரு வெள்ளை புறா நடுப்பகுதியில் உறைந்தது. இது 5ஜி டவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர குமிழி போன்றது, இந்த புறா அதில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மேலும், “இந்த பறவையைப் பொறுத்தவரை, நேரம் சாதாரணமானது, ஆனால் அதைப் பார்க்கும்போது, ​​அது உறைந்ததாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒன்று சாத்தியமா? ஆம், நிச்சயமாக..” என்று கூறுகிறார் அந்த நிபுணர்.

Related articles

Recent articles

spot_img