மதுரையில் இருந்து… ரஜினியின் ஆன்மிக அரசியல் பிரவேசம்: அர்ஜுன் சம்பத் தகவல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
hindu makkal katchi madurai int - 2026

2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்…

கொரோனா ஊரடங்கு காலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு தடையாக அமைந்துள்ளது. 2020-21 ஜனநாயக போர்க்கள அரசியல் தேர்தலில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என்ற கொள்கையை வைத்து ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் நடைபெற உள்ளது.

ஆன்மீக அரசியலை உருவாக்குவதற்கு உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்குவதற்கு ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தினால் அது தள்ளிப் போயுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலம் முடிந்தவுடன் தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்து அரசியல் அலையை உருவாக்கி இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி ஆன்மீக அரசியலை தமிழகத்தின் அரியணையில் ஏற்றுவார் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.