காரில் வந்து பூத்தொட்டியை களவாடிய திருடன்… வைரல் வீடியோ!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
flower pot theft by a man came in car1 - 2026

சாதாரணமாக வைரல் வீடியோக்கள் மிகவும் சின்னதாக இருக்கும். இது சற்று பெரிதாக இருக்கிறது. ஆனாலும் நெட்டிசன்கள் இதனை முழுவதுமாக பார்த்து காமண்ட் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு ரெகுலராக சாதரணமாக கிடைக்காது. ஏதோ பர்ஸ், செயின் திருட்டு போய்விட்டது என்றால் அது எப்போதும் சாதாரணம் தானே என்று நினைக்கலாம்.

ஆனால் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஒரு மனிதர் காரில் வந்து பூந்தொட்டியை களவாடிச் சென்றார். அதற்கு தொடர்பான வீடியோ இது…

ஒரு வீட்டு கேட்டை தாண்டியதும் காரினை நிறுத்தி அந்த மனிதர் காம்பவுண்டு சுவர் மேல் இருந்த ஒரு பெரிய பூந்தொட்டி… செடியோடு இருக்கும் பூந்தொட்டியைப் பார்த்தார். அதனை எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் தென்படவில்லை. அதை மிக சிரமத்தோடு உயரத்தில் இருந்து கீழே இறக்கினார்.

அது மிகவும் பாரமான தொட்டி போல் உள்ளது. அதனை தூக்கமுடியாமல் தானும் கீழே விழுந்து தொட்டியையும் கீழே போட்டு இவ்வாறு விழுந்து எழுந்து கடைசியில் அந்த பூத் தொட்டியை கார் டிக்கியில் ஏற்றி விட்டார்.

ALSO READ:  சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு பாடம் எடுத்த பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்!

பலவந்தமாக கிளைகளை அதற்குள் அமுக்கி வைப்பதற்குள் அந்த வீட்டுக்காரருக்கு சந்தேகம் வந்து வீட்டில் இருந்து வெளியில் ஓடி வந்து பார்த்தார். காம்பவுண்ட் சுவர் மேலிருந்த பூந்தொட்டி தென்படவில்லை.

flower pot theft by a man came in car - 2026

ஐயோ ஐயோ என்று நினைத்து கேட்டை திறந்து கொண்டு வெளியே வருவதற்குள்… அந்த கெட்டிக்காரத் திருடர் காரை ஓட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

லக்னோவில் உள்ள இந்திரா நகரில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு தொடர்பாக 1.5 நிமிடங்கள் உள்ள சிசிடிவி வீடியோ க்ளிப்பிங் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. புதன்கிழமையில் இருந்து இப்போது வரை 17 லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். 217 பேர் லைக் செய்துள்ளார்கள். 114 பேர் காமெண்ட்ஸ் செய்துள்ளார்கள்.

அவர்கள் செய்துள்ள காமென்ட்ஸ் கூட மிகவும் புன்னகையை வரவழைப்பது போலவே உள்ளது. இந்த மனிதரை யுபி சுற்றுச்சூழல் துறை சார்ந்த பிராண்ட் அம்பாசிடராக செய்ய வேண்டும் என்றும் அவார்டு கொடுக்க வேண்டும் என்றும் ஒருவர் கூறியுள்ளார். அதனை தினமும் தூக்கி உடற்பயிற்சி செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார் என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.