‘மோடி தி பெஸ்ட்’! டாப் கியரில்… மக்கள் செல்வாக்கு!

Published:

pm modi - 2026

கடந்த நான்கு வருடங்களில் பிரதமர் மோடியின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்து, இப்போது டாப் கியரில் உள்ளது. மோடியே தி பெஸ்ட் என்கிறார்கள் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள். இது ஒரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

Karvy Insights Mood of the Nation (MOTN) அமைப்பு நடத்திய ஆய்வில் நரேந்திர மோடி இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர் என்று தெரியவந்துள்ளது. அடுத்து, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மக்கள் இடம் கொடுத்துள்ளனர்.

44 சத இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று வாக்களித்து தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அடுத்து, 14 சதவிகித வாக்குகளுடன் வாஜ்பாய்க்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்துள்ளனர்.

இந்திரா காந்தி 12 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் மன்மோகன் சிங் 7 சதவிகித வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். லால் பகதூர் சாஸ்திரிக்கு 5 சதவிகித வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர்.

இதில் குறிப்பிடத் தக்க அம்சமாக, கடந்த ஜனவரி மாதத்தில் நடத்தப் பட்ட ஆய்வில் கொடுக்கப் பட்ட ஆதரவை விட, தற்போதைய ஆய்வில் 10 சதவிகித வாக்குகளை அதிகமாகக் கொடுத்து, நரேந்திர மோடியை நம்பிக்கைக்கு உரியவராக காட்டியுள்ளனர்.

இதற்கு முந்தைய ஆய்வில் பிரதமர் மோடிக்கு 34 சதவிகித வாக்குகளும் இந்திரா காந்திக்கு 16 சதவிகித வாக்குகளும் கிடைத்திருந்தன. வாஜ்பாய்க்கு 13 சதவிகித வாக்குகளும் ஜவஹர்லால் நேருவுக்கு 8 சதவிகித வாக்குகளும் ராஜீவ் காந்திக்கு 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருந்தன.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இதற்கு முன்னர், 2016 ஜூலையில் நடத்தப் பட்ட ஆய்வில் இந்திரா காந்தி 23 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். 18 சதவிகித வாக்குகளுடன் வாஜ்பாய் இரண்டாவது இடத்திலும் 17 சதவிகித வாக்குகளுடன் மோடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் மிகப் பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும் என்று, 66 சதவிகித மக்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரம், ராகுல் காந்தி பிரதமராவார் என 8 சதவிகிதம் பேரும், சோனியா காந்தி பிரதமராவார் என 5 சதவிகிதம் பேரும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், அமித் ஷா பிரதமராக வருவார் என்று 4 சதவிகிதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல் காந்தியே சரியானவர் என்று 23 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த Karvy Insights Mood of the Nation அமைப்பு சார்பாக கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 27-ந் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவின் 19 மாநிலங்களில் 97 நாடாளுமன்ற, 194 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 12,201 பேரிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

மோடி மீண்டும் பிரதமராக 66 % பேர் ஆதரவு : பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி அரசின் அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் கருத்துக்களை சர்வே மூலம் அறிந்து இன்று வெளியிட்டுள்ளது.

#அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் …
மோடி – 66 % பேர் ஆதரவு
ராகுல் காந்தி- 8 % பேர் ஆதரவு
சோனியா – 5 % பேர் ஆதரவு

#கொரோனா நிலைமையை பிரதமர் மோடி எவ்வாறு கையாள்கிறார் ?
மிக நன்றாக இருந்தது ; 77 % பேர் ஆதரவு
பரவாயில்லை ; 18 % பேர் ஆதரவு
சரியில்லை ; 5 % பேர் ஆதரவு

#பொருளாதார விஷயங்களில் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து
மிக நன்றாக இருந்தது ; 48 % பேர் ஆதரவு
சூழ்நிலைக்கேற்ப ; 40 % பேர் ஆதரவு
சரியில்லை ; 12 % பேர் ஆதரவு

#மோடி அரசின் பொருளாதார செயல்பாடுகளை மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு மக்கள் கருத்து கூறுகையில்…. ”
43% பேர் மன்மோகன் சிங் அரசை விட மோடி அரசு பரவாயில்லை ,, அதே சமயம்
45 % பேர் மன்மோகன் சிங் அரசும், மோடி அரசின் செயல்பாடும் ஒன்றாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

#இந்தியா சீனாவை நம்பலாமா ?
நம்பக் கூடாது ; 84 சதவீதம்
நம்பலாம் ; 9 சதவீதம்

#சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் தடைகள் குறித்து
தடை செய்ய வேண்டும் ; 92 சதவீதம்
தடை விதிக்க வேண்டாம் ; 7 சதவீதம்
குறிப்பாக 18 முதல் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடம் இந்த சீன பொருள்கள் எதிர்ப்பு அதிக அளவில் காணப்பட்டதாகவும், கல்வான் பிரச்சினைக்கு பிறகு இந்த எதிர்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

#சீன ஆப் களுக்கு தடை
மிக நன்று ; 91 சதவீதம்
நல்லது அல்ல ; 7 சதவீதம்

Related articles

Recent articles

spot_img