ஆசை மனைவியை…அதுவும் மரித்துவிட்ட மனைவியை மாயமாய்க் கொண்டு வந்து… அதிசயம் செய்த கணவர்..!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
wax-statue2
wax-statue2

கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகிலுள்ள கொப்பம் மாவட்டத்தில் நடந்த அதிசயம் இது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 

ஒரு கணவன் மனைவி இரு பெண் குழந்தைகள் மற்றும் சில உறவினர்கள் வந்து இருப்பதை இந்தப் புகைப்படங்களில் பார்க்கிறோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்தவர்களை புன்சிரிப்புடன்  வரவேற்கும் விதமாக இந்தப் பெண்மணியையும் இதப் புகைப்படத்தில் நாம் காண்கிறோம்.

wax-statue1
wax-statue1

ஆனால் இந்தப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். ஆனால் மனைவியை புதுமனையில் அமர வைக்க வெகு காலம் ஆசை கொண்டிருந்த அந்தக் கணவர் ஒரு வழி கண்டுபிடித்தார். மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து சோபாவில் அமர்த்தி இருக்கிறார் அந்த அன்புக் கணவர்.

wax-statue
wax-statue

இதனைக் கண்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வரும் இந்தப் படங்கள், பலரை மேலும் ஆச்சரியப் படுத்தி வருகிறது.

wax-statues
wax-statues

ராமாயணத்தில் ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்த போது தன் மனைவி சீதை அருகே இல்லாத நிலையில் மனைவியை போல் தங்க விக்கிரகம் செய்து அருகே அமர்த்திக் கொண்டு தம்பதியாக யாகம் செய்தார் என்று குறிப்பு உள்ளது. அதனை இந்தக் கலியுகத்திலும் இந்த மனிதர் எடுத்துக்கொண்டு மெய்யாக்கி இருக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.