வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: என்ன நடந்தது? விளக்கிய டிரம்ப்!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
trump
trump

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது! அதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ கிசுகிசுத்தார். உடனே டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் வந்ததாகவும், இதனால் எச்சரிக்கை அடைந்த பாதுகாப்புக் காவலர்கள், அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்ததாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டது. மேலும், அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து வந்த டிரம்ப், செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது, வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது என்றும், ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.