நடிகையின் இடுப்பை பிடித்த முதல்வர்! வைரலாகும் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா
yediyurappa-in-cauvery-function-1
yediyurappa-in-cauvery-function-1

நடிகை சுமலதாவின் இடுப்பில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக ஒரு காட்சி இணையதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் காவிரி நீர் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா ஸ்ரீரங்கப்பட்டனம் தாலுகாவில் நடைபெற்றது. இந்த அணை திறப்பு விழாவிற்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வந்திருந்தார்.

மாண்டியா தொகுதியைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி. நடிகை சுமலதாவும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இருவரும் சேர்ந்து அங்கே காவிரி நீரில் பூக்களை தூவி அணையை திறந்தனர்.

நீருக்கு பூ தூவும் போது, நீங்களும் வந்து பூத் தூவுங்கள் முன்னே வாருங்கள் என்று சொல்லி அருகில் இருக்கும் நபரை அழைப்பது போல் எடியூரப்பா, சுமலதாவை அழைக்க, அது சுமலதா இடுப்பில் எடியூரப்பா கை வைப்பதாக சித்திரிக்கப் பட்டு, சமூகத் தளங்களில் வைரலாக்கப் பட்டுவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.