சுங்கச்சாவடிகளில் உயரும் கட்டணம்!

Published:

Customs

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டணம் உயர்த்தபடவிருக்கிறது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப் பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கால் சுங்கச்சாவடி மூடப்பட்டிருந்ததால், இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 21 சுங்கச்சாவடிகளில் செப்.1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம்(குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டுபட்டி (சேலம்), வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்), திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்) உட்பட 21 சுங்கசாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அதன்படி, 72 கி.மீ நீளம் கொண்ட விக்கிரவாண்டி (விழுப்புரம்) சுங்கச்சாவடிக்கு ஒரு தடவை கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு 80, இலகு ரக வர்த்தக வாகனம், இலகுரக சரக்கு வாகனம், மினிபஸ் ஆகியவற்றுக்கு 145லிருந்து 150 ஆகவும், லாரி, ஆம்னி பஸ்களுக்கு 285லிருந்து 290, 3 ஆக்ஸில் வர்த்தக வாகனம் 460லிருந்து 475, கனரக வாகனங்களுக்கு 460லிருந்து 475, பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு 460லிருந்து 475 என கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது. இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தநிலையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வருவாய் இன்றி பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இந்த சூழலில் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாறாக, கட்டணத்தை உயர்த்துவதால், சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன.

சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை 5 சதவீதம் முதல் 10% வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 26 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இது ஏப்ரல் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படும். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.

Related articles

Recent articles

spot_img