பாஸ்வேர்ட் மறந்து போச்சா..? ஜிமெயிலை லாகின் செய்ய..!

gmail - 2026

நம்மில் பலருக்கும் ஜிமெயில் பற்றிய பெரிய அறிமுகம் தேவைப்படாது. கிட்டத்தட்ட 2 பில்லியன் யூசர்களை தன்வசம் கொண்டுள்ள ஜிமெயில், உலகம் முழுதும் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் ஒன்றாகும்.

ஜிமெயில் ஆனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’, ‘ஆன்லைன் கிளாஸ்’, ‘விர்ச்சுவல் ஈவென்ட்’ என்கிற ‘கான்செப்ட்டுகள்’ உருவாக, பெரும்பாலான விஷயங்கள் ஆன்லைன் வழியாகவே நடந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, ஜிமெயிலுக்கான லாக்இன் பாஸ்வேர்டுகளின் பாதுகாப்பு எதை காட்டிலும் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

கூகுள் போட்டோஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் மீட் மற்றும் பிற கூகுள் சேவைகளை அணுகுவதற்கு உங்களுக்கு இது தேவை. எனவே, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கான அணுகலை இழப்பது அல்லது பாஸ்வேர்ட் தெரியாமலேயே ஜிமெயில் அக்கவுண்ட்டை விட்டு லாக் அவுட் ஆகிவிடுவது போன்ற செயல்கள் உங்களை பெரும் சிக்கலுக்குள் தள்ளலாம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

ஒருவேளை நீங்கள் உங்கள் ஜிமெயில் லாக்-இன் பாஸ்வேர்ட்டை இழந்து விட்டால், மறந்து விட்டால் உங்கள் அக்கவுண்ட்டிற்கான அணுகலைத் திரும்பப் பெறுவதற்கான பல்வேறு வழிகள் உள்ளன.

பாஸ்வேர்ட் இல்லாமல் லாக்டு ஆன ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகுவது எப்படி?

வழிமுறை 1:

பாஸ்வேர்ட் இல்லாமல் ‘லாக்’ ஆன ஜிமெயில் அக்கவுண்ட்டை திறக்க, அல்லது பாஸ்வேர்டு தெரியாத போதும் மொபைல் போன் வழியாக லாக்-இன் செய்ய நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். இந்த செயல்முறையில் ஜிமெயில், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி ஒன்றை அனுப்பும், அதை வைத்து நீங்கள் லாக்-இன் செய்யலாம்.

வழிமுறை 2:

ரெக்கவரி இமெயில் ஐடி / போன் நம்பரை பயன்படுத்தலாம். ஜிமெயில் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மீட்பு மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் எண் வழியாக பாஸ்வேர்ட் அல்லது ஒடிபி விவரங்களைப் பெறவும்.

ஒருவேளை ரெக்கவரி ஜிமெயில் அல்லது போன் எண்ணையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை என்றால், கூகுள் அக்கவுண்ட் பக்கத்தில் உள்ள “இது நீங்கள்தான் என்பதை நாங்கள் சரிபார்க்கும் வழிகள்” (Ways we can verify it’s you) என்கிற விருப்பத்தின் கீழ் தொடரலாம்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

வழிமுறை 3:

உங்கள் ஆண்ட்ராய்டு போன் ஆனது கூகுள் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். இது “பாஸ்வேர்டு மறந்து போச்சே!” என்கிற சிக்கலுக்கு ஒருபோதும் வழிவகுக்காது. மேலும் தோராயமாக உருவாக்கப்பட்ட எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் லாக்-இன்னை உறுதிப்படுத்த, கூகுள் ஆத்தென்ட்டிகேட்டர் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

வழிமுறை 4:

நீங்கள் வழக்கமாக லாக்-இன் செய்ய பயன்படுத்தும் டிவைஸ் / லோக்கேஷனை பயன்படுத்தி லாக்-இன் செய்ய முயற்சிக்கவும், அதாவது லாக்-இன் செய்ய அடிக்கடி பயன்படுத்தும் டிவைஸ் (கணினி, லேப்டாப் அல்லது பிசி), ப்ரவுஸர் மற்றும் லோக்கேஷனில் இருந்து லாக்-இன் செய்யவும்.

வழிமுறை 5:

செக்யூரிட்டி கேள்வி / கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலமும் நீங்கள் லாக்-இன் செய்யலாம். எல்லா இமெயில் அக்கவுண்ட்களும் சீக்ரெட் செக்யூரிட்டி கேள்விகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை உருவாக்கும் போதே செக்யூரிட்டி கேள்வி மற்றும் அதற்கான பதிலை அமைக்க சொல்லி கூகுள் கேட்கிறது. உங்களிடம் ரிக்கவரி மின்னஞ்சல் ஐடி அல்லது போன் நம்பர் இல்லையென்றால், லாக்இன் செய்ய இந்த செக்யூரிட்டி கேள்விகளுக்கு பதிலளிக்கலாம்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories