
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் விளையாட்டிற்கு அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பாரம்பரிய சேவல் கோழி இனங்கள் பாதுகாக்க நடவடிக்கை.எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனார். மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ,பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் சேவல் வெற்போருக்கு அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாரம்பரிய சேவல் ,கோழி இனங்கள் பாதுகாக்கும் சூழ்நிலை உள்ளதாக சேவல் வளர்ப்போர் கூறியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவல் வெற்போர் (சேவல் கட்டு) தொன்று தொட்டு நடந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதனால் சேவல் வளர்ப்போர் மிகுந்த கவலையில் இருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் சேவல் வெற்போர் நடத்த அனுமதி அளிக்க ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
சேவல் வெற்போர் என்பது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதற்காக நமது பாரம்பரிய பாரம்பரியசேவல் இனங்களான கருங்குவளை, சாம்பல், கருங்குளவி, புள்ளி ,சாம்பல் செவலை, உள்ளிட்ட நமது இன சேவல்களை கொண்டு பாரம்பரிய முறைப்படி சேவல் வெற்போர் நடந்து வந்தது. இதற்கான போட்டிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது .இந்தப் போட்டிகளின் கால அளவு ஒரு மணி நேரம்தான்.
கால்மணி நேரம் சேவல் மோதலும், கால்மணி நேரம் ஓய்வு அளிக்கப்படும். இதனால் பாரம்பரிய சேவல் இனங்கள் நல்ல வலுவுடன் இருந்து வந்தது. சேவல் போட்டிக்கு தயார் செய்யும் பொருட்டு அந்த சேவலுக்கு நாளொன்றுக்கு காலையும் மாலையும் இரண்டு முட்டை வீதம் வழங்குவோம் .
10 பாதாம் பருப்புகள் உள்ளிட்ட உணவுப் பொருளும் வாரம் ஒன்றுக்கு சத்துமாவு வழங்கி அதனை பாதுகாத்து வந்தோம். இந்நிலையில் தொடர்ந்து சண்டையிடும் போது ஒரு வயது மற்றும் 2வயது சேவல்கள் நல்ல வலுவுடன் காணப்படும். நமது பாரம்பரிய கலைகள் அழியாமல் காணப்பட்டு வந்தது.
பல்வேறு காரணங்களை காட்டி தமிழக அரசும் நீதிமன்றமும் இதனை தடை செய்தது இதனால் பல்வேறு ஊர்களில் சேவல் இனங்கள் வளர்க்காமல் அழிந்து வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சேவல் வெற்போருக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.
போட்டிகள் நடத்தப்படுவதால் .மதுரை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகம் பேர் வந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது என கேட்டுக் கொண்டனர்