காதல் கசந்தால் திருமணம்: விக்னேஷ் சிவன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
nayan - 2026

தமிழ் சினிமாவின் இளம் ஜோடிகளான விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் பற்றி தினம் ஒரு வதந்தி வருவது வழக்கம்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள விக்னேஷ் சிவன் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அசத்தும் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். நானும் ரெளடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலந்தது.

அப்போதில் இருந்தே ஒன்றாக சுற்றி வரும் இருவரும், ஒரே வீட்டில் தான் வசித்து வருகின்றனர். அவ்வப்போது கோயில்களுக்கு ஜோடியாக சென்று வருவார்கள். இதற்கு நடுவே வெளிநாடுகளுக்கும் சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேற்றுவார்கள். இவர்களுக்கு எப்போது திருமணம் என்பது தான் கோலிவுட்டில் இப்போதைய முக்கிய பேச்சாக உள்ளது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில், “இதுவரை எங்களுக்கு 22 முறை இணையதளங்களில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.

மூன்று மாதத்துக்கு ஒருமுறை திருமணம் செய்து கொள்வோம். எங்கள் திருமணம் பற்றிய வதந்திகளை ரசிப்போம். எங்களுக்கு இன்னும் நிறைய சாதிக்கணும். திட்டமிட்ட அனைத்தையும் முடித்த பிறகு திருமணம் செய்து கொள்வோம். காதல் கசந்தால் தான் திருமணம் செய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.