எஸ்பிபி 90 சதவீத மயக்க நிலையிலிருந்து மீண்டதாக எஸ்பிபி சரண் தகவல்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்
spb-charan
spb-charan

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் 90 சதவிகித  மயக்க நிலையில் இருந்து மீண்டுவிட்டார் என்று, அவரது மகன் எஸ்பிபி சரண் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபி சரண் தமது தந்தை எஸ் பி பாலசுப்பிரமணியம்  உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்… மருத்துவர்களிடம் எஸ்பிபி உடல் நிலை குறித்து பேசினேன் என்றும், சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பதாகவும் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறியதாக  தெரிவித்துள்ளார் 

எஸ்பிபி குணமாக வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளுக்கு தாமும் தமது குடும்பத்தினரும் நன்றி தெரிவிப்பதாக எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். தமது தந்தையின் சிகிச்சைக்கு இரவு பகலாக பாடுபட்ட மருத்துவர்களுக்கு நன்றி கூறியுள்ள எஸ்பிபி சரண்,  விரைவில் தமது தந்தையை ஆரோக்கியமான நபராக காணலாம் என்றும், இந்த நாள் தமக்கு நல்ல நாளாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அவரது டிவிட்டர் பதிவு: 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.