26/09/2020 4:56 PM

நெல்லூரில் இந்த ஆண்டு களையிழந்த ரொட்டித் திருவிழா!

வீட்டில் சப்பாத்தி தயாரித்து எடுத்து வந்து குளத்தில் உள்ள நீரில் இறங்கி நின்று கொண்டு ஒருவருக்கொருவர் மகளிர் ரொட்டியை பகிர்ந்து கொள்வர்.

சற்றுமுன்...

வெள்ளத்தில் மூழ்கிய தேவகோட்டை பத்திர பதிவு அலுவலகம்!

தண்ணீர் இருப்பதால் தண்ணீர் வெளியேறினால் மட்டுமே இரு சக்கர வாகனங்களை எடுக்க முடியும்.

பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்!

பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.

எஸ்பிபி.,க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி!

மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.தமிழ் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக...

சரவணப் பொய்கையில் செத்து மிதந்த மீன்கள்: இந்து இளைஞர் முன்னணி ஆர்ப்பாட்டம்!

பின்னர் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் இதுதொடர்பாக கோவில் நிர்வாக கண்காணிப்பாளர் கர்ணனிடம் மனு அளித்தனர்.

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்
nellore-rotti-function-1
nellore-rotti-function-1

நெல்லூர் ரொட்டித் திருவிழா இந்த வருடம் ரத்தானது. பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவு.

நெல்லூர் நகரத்தில் உள்ள ‘பாராஷஹித்’ தர்கா அருகில் சுவர்ணக் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் உற்சாகமாக நடக்கும் இந்த ரொட்டி திருவிழா மீது இந்த ஆண்டு கொரோனா தாக்குதல் விழுந்துள்ளது.

இந்த மாதம் 30 ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை நடக்க இருந்த பாராஷஹித் தர்கா உருஸ் உற்சவத்தில் கொரோனா பரவல் காரணமாக சில மாற்றங்களை செய்துள்ளார்கள்.

ரொட்டித் திருவிழாவை ரத்து செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் சந்தனக்கூடு உற்சவம் மட்டும் நடக்கும் என்று நேற்று அறிவித்தார்கள். அதிலும் வெறும் 20 பேர் மட்டுமே பங்கு பெறுவதற்கு அனுமதித்து உள்ளார்கள். வெகு தூரத்திலிருந்து வரும் பக்தர்களை வரவேண்டாம் என்று அதிகாரிகள் கூறி உள்ளார்கள்.

பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் நகரில் ஒவ்வொரு ஆண்டும் மொஹர்ரம் மாதத்தில் நடக்கும் சம்பிரதாயமான ரொட்டி த் திருவிழா மிகவும் பிரத்தியேகமானது. இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமே அன்றி அருகில் உள்ள பிற மாநிலங்களில் இருந்தும் கூட இங்கு வந்து சப்பாத்திகளை பெற்றுக்கொண்டு இறைவனிடம் வேண்டிக் கொள்வதும், தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து சப்பாத்திகளை பிறருக்கு பகிர்வதும் இங்கு வழக்கமாக நடக்கும்.

கல்வி, ஆரோக்கியம், திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் பிற பல கோரிக்கைகளுக்காக இங்கு சப்பாத்திகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இவற்றில் எதை வேண்டிக் கொண்டாலும் இங்கு ரொட்டிகள் இலவசமாகக் கிடைக்கும். ரொட்டியைப் பெற்று வேண்டுதல்களைச் செய்து கொள்ளலாம். மீண்டும் வேண்டுதல் நிறைவேறியவுடன் அவர்கள்கூட அதுபோலவே ரொட்டி தேவையானவர்களுக்கு கொடுப்பதும் இங்கு உள்ள சிறப்பான அம்சம்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்த ரொட்டித் திருவிழாவுக்கு அரசாங்கமும் உள்ளூர் வாசிகளும் அதிகாரிகளோடு கூட சேர்ந்து மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வருவார்கள். முஸ்லிம்களோடு சேர்ந்து பிற மதத்தவர்களும் எந்த வேறுபாடும் இன்றி மிகவும் பவித்திரமாக பக்தியோடு இந்த ரொட்டி பண்டிகையை நடத்தி வருவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு ரொட்டிப் பண்டிகையை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். அதனால் பக்தர்கள் இந்த ஆண்டு ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள்.

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பாராஷஹீது தர்காவில் நடக்கும் ரொட்டி பண்டிகையை அதிகாரிகள் ரத்து செய்து பக்தர்களை வரவிடாமல் தர்கா அருகில் போலீசார் பந்தோபஸ்து ஏற்பாடு செய்துள்ளார்கள். அதனால் வெகு தொலைவில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். திங்கள் அன்று நள்ளிரவில் சந்தன உற்சவம் நடக்க உள்ளது. இதற்கு வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளார்கள்.

பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் வீட்டிலேயே பண்டிகையை நடத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மொஹரம் பண்டிகையின் போது இந்து முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து நெல்லூர் சுவர்ணக் குளத்தில் பாராஷஹீத் தர்கா அருகில் பல்வேறு கோரிக்கைகளை வேண்டிக் கொண்டும் நிறைவேறிய கோரிக்கை களுக்காக வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டும் ஒருவருக்கொருவர் சப்பாத்திகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். அதனால் இது ரொட்டி திருவிழா என்று பெயர் பெற்றது.

இதில் பெண்கள் பெருமளவில் கலந்து கொள்வர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கு பெறுவதற்காக பாரத தேசத்தின் பல இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவர்.

ஆற்காடு நவாப் தன் கோரிக்கை நிறைவேறியதால் ஒவ்வொரு ஆண்டும் இந்த தர்காவிற்கு வந்து நன்றி தெரிவிக்கும் விதமாக சுவர்ணக் குளத்தில் ரொட்டிகளை விட்டுச் சென்றதாக ஒரு வரலாறு உண்டு. அதன் தொடர்பாகவே இநதப் பண்டிகை கொண்டாடப் படுவதாக கூறப்படுகிறது.

1830 ல் தொடங்கி வருடா வருடம் தவறாமல் நடந்து வரும் இந்த பண்டிகை குறித்து உள்ளூர் செய்தித் தாள்களிலும் பதிவாகிஉள்ளது.

வீட்டில் சப்பாத்தி தயாரித்து எடுத்து வந்து குளத்தில் உள்ள நீரில் இறங்கி நின்று கொண்டு ஒருவருக்கொருவர் மகளிர் ரொட்டியை பகிர்ந்து கொள்வர். பின்னர் அரசாங்கமே ரொட்டிகளை இலவசமாக பக்தர்களுக்கு அளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

- Advertisement -
Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

மத்திய அரசின் விவசாய சட்டம்… கருத்துகள் சில..!

அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்

சமையல் புதிது.. :

சினிமா...

எஸ்பிபி., மறைவு; இந்து முன்னணி ராம.கோபாலன் இரங்கல்!

தனது குரலால் கோடிக்கணக்கான மக்களை கட்டிப் போட்டு இன்று கண்ணீரில் கரைய வைத்திருக்கும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன் மறைவுக்கு  இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்

Source: Vellithirai News

முழு அரசு மரியாதையுடன் எஸ்பிபி இறுதிச் சடங்கு: அரசுக்கு பாரதிராஜா நன்றி!

பாடகர் s p பாலசுப்பிரமணியத்திற்கு முழு அரசு மரியாதை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக திரை உலகின் சார்பாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Source: Vellithirai News

‘பாடும் நிலாவே…’ பாலுவுக்கு ‘மைக்’ ஹீரோ மோகன் கண்ணீர் அஞ்சலி!

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். Source: Vellithirai News

பாடும் நிலா பாலு – எஸ்பி பாலசுப்பிரமணியன் காலமானார்!

உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

செய்திகள்... மேலும் ...

Translate »