ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!

அடடே... அப்படியா? இந்தியா கல்வி சற்றுமுன்
pinarayvijayan e1565532055750

கேரள மாநிலத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், கல்வித்துறை இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய பினராயி விஜயன், தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.