வாய்க்கால காணலீங்க எசமான்! ஆட்சியரிடம் புகார் அளித்த விவசாயி!

அடடே... அப்படியா? புகார் பெட்டி மதுரை
madurai-complaint-on-missing-cannel

நீர் ஆதார வாய்க்காலை காணவில்லை என்று விவசாயி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பூதகுடி ஊராட்சியில் விவசாய நிலத்துக்கு வரும் நீர் ஆதார காணவில்லையென, விவசாயி ஒருவர் ஆட்சியரிடம் புகார் செய்துள்ளார்.
மதுரை அருகே குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன்.

இவர் பூதகுடி ஊராட்சியில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறாராம். இவருடைய வயலுக்கு வரும் நீர் ஆதார பாசனக் கால்வாயை, வீட்டு மனை போடுவதற்காக சிலர் அழித்துவிட்டார்களாம்.

இது தொடர்பாக விவசாயி கண்ணன் பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு பொறியாளரிடம் மனு அளித்தும், வாய்க்காலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வில்லையாம். ஆகவே, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாசன வாய்க்காலை மீட்டுத் தரக்கோரி, திங்கள்கிழமை காலை மனு அளித்தார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.