செப்.7: தமிழகத்தில் இன்று… 5,776 பேருக்கு கொரோனா; 89 பேர் உயிரிழப்பு!

Published:

கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,776 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று 89 பேர் உயிரிழந்துள்ளனர் 

தமிழகத்தில் இன்று மேலும் 5,776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. .இதை அடுத்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,69,256 என அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,42,603 ஆக உயர்ந்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7, 925 ஆக அதிகரித்துள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 5,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதை அடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 4,10,116 ஆக அதிகரித்துள்ளது என்று,  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக, கோவையில் 524 பேருக்கும், கடலூரில் 398 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. 

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டில் 330 பேருக்கும்  திருவள்ளூரில் 248 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 190 பேருக்கும் கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

districtwise-corona-affected-cases-sep-07
districtwise-corona-affected-cases-sep-07

Related articles

Recent articles

spot_img