பிக்-பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்: 100 நாள் கூத்து ஒரு வழியாக முடிந்தது!

தமிழகத்தின் எத்தனையோ அரசியல் பிரச்னைகள், சமூக நிகழ்வுகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாக அடிக்கப்பட்ட 100 நாள் தொலைக்காட்சிக் கூத்தின் முதல் எபிசோட் ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோட் இனிதே முடிவடைகிறது.

நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி என பலரையும் வடிகட்டிய எஞ்சியிருந்த சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக ‘100-வது’ நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது, அந்த ஒருவரை அறிவித்தார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மேடையில் தோன்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். ஓவியா வந்தபோது பெரும் அதிர்வலை! ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனா, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு ஐடியா கொடுத்துச்சு. நன்றி பிக் பாஸ் அன்ட் லவ் யூ ஆல்’ என்று சொல்லி தன் பேவரிட்டான, ‘கொக்கு நெட்ட’ பாடலைப் பாடியும் காட்டினார்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பிக் பாஸில் நடந்த நிகழ்வுகளின் குறுந்தொகுப்பைப் போட்டுக் காட்டினார்கள். அதில் ஓவியா. ‘இது விளையாட்டு இல்லை. என் வாழ்க்கை. எனக்கான அடையாளம்’ என்றார். ‘நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் சிறந்த படம் பிக் பாஸ் தான் ‘ என்றார் பரணி.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம். ஓவியாவை கன்ஃபெஷன் ரூம்க்கு அழைத்து ஒரு கடிதத்தைப் படிக்க சொன்னார் பிக் பாஸ். ஓவியா உதட்டை அசைக்க, அதற்கு வாய்ஸ் கொடுத்தார் கமல். பின், ஓவியாவை உள்ளே அழைத்து ஒரு போட்டியாளரை மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். சிறிது நேர விளையாட்டுக்குப் பின், ஹரீஷ் கல்யானை அழைத்துச் சென்றார் ஓவியா.

‘உள்ளே உள்ள சினேகனையும் ஆரவ்வையும் நான் போய் அழைத்து வரப் போகிறேன்’ என்றார் கமல். அப்போது ஒரு குறும்படத்தில், “பிக் பாஸ் என்ற பெயரில் பேசிய குரலை இனி கேட்க முடியாது. ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி பிக் பாஸ் குரல் விடைபெற்றது. அதைக் கேட்டதும் கண் கலங்கினார் சினேகன். பின்னர், ‘விரு விரு மாண்டி விருமாண்டி’ பாடலுடன் மூவரும் மேடை ஏறினார்கள். அப்போது பேசிய கமல், ‘இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.’ என்றார்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அவர் பேசி முடித்ததும் பெரும் ஆரவாரங்களுக்கு இடையே பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை அறிவித்தார் கமல். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கியதுடன், இந்த 100 நாள் கூத்தும் முடிவடைந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories