ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் – போலீஸார் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு!

Published:

rajapalayam-pudiya-thamizhagam1
rajapalayam-pudiya-thamizhagam1

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் போலீஸாரிடம் வாக்கு வாதம் தள்ளுமுள்ளு. போக்குவரத்து பாதிப்பு.

புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கடந்த சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு அவர் உடல் மதுரையில் இருந்து இன்று கொண்டு வரப்பட்டது. இராஜபாளையம் நகர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினர் போலீஸாரிடம் வாக்குவாதம் தள்ளுமுள்ளு கடைகள் அடைக்கப்பட்டு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடி பகுதியில் புதிய தமிழக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் கடந்த சனிக்கிழமை அன்று அவரது தோட்டத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட அன்று முதல் மூன்று நாட்கள் முதுகுடி பகுதியில் உறவினர்கள் மற்றும் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து ராஜபாளையம் பகுதிகளில் வண்டிகளை சேதப்படுத்தி கடைகளை அடைக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்ணன் பேச்சுவார்த்தை தொடர்ந்து 16 ஆம் தேதியான இன்று உடலை மதுரையில் இருந்து பெற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டனர். அதன்படி மதுரையில் இன்று உடலை வாங்கி அங்கிருந்து 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் ஊர்வலமாக வந்தனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
rajapalayam-pudiya-thamizhagam
rajapalayam-pudiya-thamizhagam

மதுரை திருமங்கலம் டோல்கேட் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதை தொடர்ந்து ராஜபாளையம் பகுதியில் நுழைந்தது முதல் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போலீசாருடன் தள்ளுமுள்ளு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் அருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். அங்கு சிலர் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து முதுகுடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார். இன்று இந்த உடலை பெற்றுக் கொண்டு வந்தவர்கள் ஊர்வலமாக வந்ததால் ராஜபாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்து சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

இது பொது மக்களிடையே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. போலீசார் சமரசத்தில் ஈடுபட்டபோதும் விருதுநகர் மாவட்ட முன்னாள் எஸ்பி ராஜராஜன் – னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளமுள்ளு ஈடுபட்டனர்.

  • வி காளமேகம், மதுரை
ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img