மதுரையில் 15வது முறையாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கிய முதியவர்!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
madurai-elder-help-corona
madurai-elder-help-corona

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15-வது முறையாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ. பத்தாயிரத்தை வழங்கினார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூழ்பாண்டியன்.

இவர் மதுரை மாட்டுத் தாவணி பகுதியில் யாசகம் எடுக்கும் பணத்தை செலவு போக, மீதிப் பணத்தை சேமிக்காமல், கொரோனா நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்.

துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் யாசகம் எடுத்து வருகிறார். யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தில் உணவுசெலவு போக மீதமுள்ள தொகையை பள்ளி,கல்லுாரிகளில் இருக்கைகள், சேர்கள் வாங்க செலவிட்டு வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் மதுரையில் தங்கி விட்டவர், இதுவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 14 முறை ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த வாரம் வரை ரூ.1.40 லட்சம் வழங்கியிருந்தார். அவரது சேவையை பாராட்டி ஆட்சியர் வினய் சுதந்திர தின விழா விருது வழங்கினார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, மதுரையில் கலெக்டர் வினய்யிடம் நேற்று, 15வது முறையாக, பூல்பாண்டியன், 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார். இதுவரை அவர், 1.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.