மனைவியோடு போதையில் கண் முன்னே கசமுசா… நண்பனை வெட்டிச் சாய்த்த கணவன்!

Published:

arrested-persons-madurai
arrested-persons-madurai
  • கள்ளக்காதல் விவகாரத்தில் வழக்கறிஞர் அடித்து கொலை
  • மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் உயிர் நண்பனே உயிரை எடுத்த பரிதாபம்
  • கொலையாளிகள் 4 பேர் கைது
  • போலீசார் விசாரணை

வைகை ஆற்றில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.மனைவியின் கள்ளக்காதலுக்கு உதவி செய்ததாக நண்பனே கொலை செய்து ஆற்றில் வீசியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை துவரிமான் பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது

உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒன்று வந்தது தெரியவந்தது

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்தபோது அந்த வாலிபரை கொலை செய்தது மதுரை சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது

இதனையடுத்து போலீசார் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் சையது ஜாபர். சூரிய பிரகாஷ் விக்னேஷ் ஆகியோரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர்

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

இதனைத் தொடர்ந்து செந்திலிடம் நடத்திய விசாரணையில் இறந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழ ரத வீதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சாக்ரடீஸ் (எ) தேவா என்பதும் சாக்ரடீஸ் திருச்சியில் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் மேலும் வழக்கறிஞராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் சாக்ரடீஸ்க்கு மதுரையில் உள்ள செந்திலின் மனைவி ரம்யாவும் மசாஜ் சென்டர் நடத்தி வந்ததால் அவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக இருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் செந்தில்குமார் சாக்ரடீஸ் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில்குமார் வீட்டில் மது அருந்தி உள்ளனர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய செந்தில்குமார் மது போதையில் இருந்த நேரத்தில் அதனைப் பயன்படுத்தி சாக்ரடீஸ் செந்தில்குமார் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது இந்த நேரம் விழித்த செந்தில்குமார் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் .

மேலும் தனது மனைவி ரம்யாவிற்கு அருப்புக் கோட்டையில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதால் நாளடைவில் அந்த நபருக்கும் ரம்யாவிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் செந்தில்குமாரை விட்டு அவரது மனைவி ரம்யா அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் உடன் ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது இதற்கு சாக்ரடீஸ் தான் உதவியதாக தெரிகிறது

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

இந்த நிலையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டதோடு கள்ளக்காதலுடன் செல்வதற்கு சாக்ரட்டீஸ் உதவியதால் செந்தில்குமார் ஆத்திரத்தில் இருந்துள்ளார் இந்நிலையில் வழக்கறிஞராக இருந்தாலும் இவர் மீது அவனியாபுரம் மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏற்கனவே கொலை வழக்கு தொடர்பாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்ட்டுள்ளதால் மதுரை நீதிமன்றத்திற்கு ஆஜராக மதுரை வந்ததாக தெரிகிறது சாக்கரடீஸ் மதுரை வருவதை அறிந்த நண்பரான செந்தில்குமார் மது அருந்த தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இதில் செந்தில்குமார் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மது மயக்கத்தில் இருந்த சாக்ரடீசை செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அடித்து உதைத்து அங்கிருந்த ஒயரை எடுத்து சாக்ரடீஸ் கழுத்தை நெரித்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

அதனை அடுத்து இறந்த சாக்ரடீஸின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்று துவரிமான் அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் வீசிச் சென்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

இந்நிலையில் சாக்ரடீஸ் என்ற தேவா சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து மதுரை அவனியாபுரம் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து கொலை செய்து எரித்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ளார் என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img