போஸ்டரை கிழித்த போலீஸ்காரர்! புளியங்குடியில் போராடிய இந்து முன்னணி!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
hindu-munnani-protest-puliyankudi
hindu-munnani-protest-puliyankudi

புளியங்குடி  காவல் நிலையம் எதிரில் இந்து முன்னணி பொறுப்பாளர் தனது வீட்டு சுவரில்  ராம.கோபாலன் நினைவேந்தல் நிகழ்ச்சி போஸ்டரை ஒட்டிய சில நிமிடத்தில் கிழித்து சென்றார் ஒரு போலீஸ்காரர்.

இது குறித்து, தென்காசி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி புகார் அளித்தது. இதனால் இந்து முன்னணி நிர்வாகி வீட்டிற்கு சென்று S.Iகாசிராஜன் மிரட்டல் விடுத்தார். 

இதை அடுத்து, போஸ்டரை கிழித்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால்  அன்று மாலை மாநில துணைத்தலைவர்   V.P.ஜெயக்குமார் மற்றும் மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று, இந்து முன்னணி தென்காசி மாவட்டம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டது. 

போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அடுத்து, நேற்று இரவு  மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் ஊர்வலமாக சென்று புளியங்குடி காவல்நிலையம் முன்பு மாபெரும்  முற்றுகை போராட்டம் நடைபெற்றது

மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மாவட்டச் செயலாளர் சிவா மாவட்டத் துணைத் தலைவர் முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

சங்கரன்கோவில் கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார் போஸ்டரை கிழித்த காவலர் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார் . அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி இதுபோல் தவறு நடக்காது எனவும் உறுதியளித்தார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னதாக, இந்த போஸ்டர் கிழிப்பு சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸ் ஸ்டேஷன் சென்று, இந்து முன்னணியினர் போட்டுக் காட்டி, இது குறித்து புகார் தெரிவித்தனர். அப்போது, அதிர்ச்சி அளிக்கும் விதமாக, போலீஸ் சீருடையில் சென்று போஸ்டரை கிழித்த போலீஸ்காரரை சுட்டிக் காட்டி, காவல் நிலையத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்த ஒரு காவலர், அவர் போலீஸ்காரரா… அவர் போலீஸ்காரரா என்று சந்தேகம் ஏற்படும்படியாக கேட்கிறார். 

அவரின் இந்தக் கேள்வி மிகவும் பயங்கரமான ஒரு போக்கு என்று கூறுகின்றனர் இந்துமுன்னணியினர். பயங்கரவாதிகளோ, பிரிவினைவாதிகளோ எவர் வேண்டுமானாலும் போலீஸ் சீருடையில் இவ்வாறு வந்து எந்த குற்றச்செயல்களையும் செய்யலாம் போலும், அதனை போலீஸார் கண்டுகொள்ள மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு அது தெரியாது என்ற ரீதியில் போலீஸார் நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் இந்து முன்னணியினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.