வணிகர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல்; தென்காசியில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
tenkasi-protest-hm
tenkasi-protest-hm

தென்காசியில் சாம்பிராணி புகை போடும் தொழிலாளி சந்திரமோகன் (45 வயது) என்பவரைத் தாக்கியதாக கோழிக்கறி கடை நடத்தும் அகமது ரியாஸ் என்ற 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரது இயற்பெயர் தங்கராஜ் என்றும், இஸ்லாமியராக மாறி தனது பெயரை அகமது ரியாஸ் என்று வைத்துக் கொண்டு, கோழிக்கறி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

தென்காசியை சேர்ந்த சந்திரமோகன், கடைகளில் சாம்பிராணி புகை போடும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்திரமோகனை, அகமது ரியாஸ் கடுமையாக தாக்கினார் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை அடுத்து, காயமடைந்த சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது கடையில் ஏன் சாம்பிராணி புகை போட்டாய் என்று கேட்டு அவரை ரியாஸ் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

tenkasi-sambirani-man-attacked
tenkasi-sambirani-man-attacked

இந்த நிலையில் தென்காசியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று மாலை இந்து முன்னணியினர் தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி நகரில் மூன்று தினங்களுக்கு முன்பு சாம்பிராணி புகை போடும் இந்து தொழிலாளி சந்திரமோகன் மீது முஸ்லிம் தாக்குதல்; நேற்று அயனிங் தொழில் செய்துவரும் சலவைத் தொழிலாளி பட்டு என்பவர் மீது முஸ்லீம் தாக்குதல்; தொடர்ந்து இன்று தொழிலாளர்கள் வியாபாரிகள் தொழில் செய்ய விடாமல் மதரீதியாக தாக்கப்படுவதை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும், இந்து வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படுவதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.

tenkasi-protest-hm1
tenkasi-protest-hm1

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொதுசெயலாளர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட துணை தலைவர் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, வக்கீல் அணி மாவட்ட தலைவர் எம்பி சாக்ரடீஸ், வக்கீல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், நகர தலைவர் நாராயணன், நகர செயலாளர் பாலாஜி, நகர செயற்குழு உறுப்பினர் ஜானகிராம், vhp மாவட்ட செயலாளர் தளவாய், குருசாமி பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சபரி மணி, நகர தலைவர் சுப்ரமணியன் மற்றும் இந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.