தண்ணீர் திட்டத்தை தடுக்கும் மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி.,யை கண்டித்து போஸ்டர்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
condemnation-madurai-mp
condemnation-madurai-mp

அரசு கொண்டு வரும் தண்ணீர் திட்டத்தை வரவிடாமல் தடுக்கும் கம்யூனிஸ்ட் எம்.பி., மற்றும் கட்சியினரைக் கண்டித்து மதுரை நகரில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி எஸ் ஆர் வி நகர் மற்றும் இந்திரா நகர் பொதுமக்கள்… மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நபர்கள் ஹார்விபட்டி பூங்காவில் நடைப்பயிற்சி செல்வதற்காகவே இத்திட்டத்தை சிலர் தடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்

முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வருவதை தடுப்பதாகவும் இத்திட்டத்தை சிலரின் சுயலாபத்திற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் துணை போவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இதனைக் கண்டித்து திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள்… மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை கண்டித்து நோட்டீஸ் ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.