பொங்கல் பரிசு ரூ.2,500: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

Published:

pongal-gift
pongal-gift

சேலத்தில் நடந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது: 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேசன்கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கப்படும். ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, திராட்சை முந்திரி வழங்கப்படும்.துண்டு கரும்புக்கு பதில் முழு கரும்பு வழங்கப்படும். 2021 ஜன.,4ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

பொங்கல் பரிசாக குடும்ப .அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி வாங்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசாக அறிவிப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையில் அம்மா மினி கிளினிக்கை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இதன்பின்னர் மக்களிடையே உரையாற்றினார். இந்த உரையின் போது, ” அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2500 பணம் வழங்கப்படும். ஒரு முழு கரும்பு, அரிசி, வெல்லம், உளர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், துணி பை வழங்கப்படும்.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பும் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் ரூ.2500 பணம் பெற்றுக்கொள்ளலாம். இதனால் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 இலட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பரிசு பண்டிகைக்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2500 பணம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த வருட பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்றும், மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கொரோனா விழிப்புணர்வுடன் மக்கள் பொங்கலை கொண்டாட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Related articles

Recent articles

spot_img