எடப்பாடியை முதல்வராக ஏற்கும் கட்சியே கூட்டணியில் இடம்பெறும்?!

Published:

rajan-chellappa
rajan-chellappa

எடப்பாடி கே.பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

மதுரை நரிமேட்டில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் திறந்து வைத்தனர்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில்

“தமிழகத்தில் கூடுதலாக 1000 அம்மா மினி கிளினிக் தொடங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம், மக்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்பதில் திட்டவட்டமாக உள்ளோம், தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி முடிவு செய்யப்படும்,

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எல்.முருகனின் கருத்து அவருடைய கருத்தாகும். தமிழகத்தில் அதிமுக தலைமையில் மட்டுமே கூட்டணி அமையும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

திமுகவின் கிராம சபை கூட்டம் செயற்கையானது, திமுகவின் கிராம சபையால் ஒரு பயனும் இல்லை, திமுக கிராம சபையால் மக்கள் தூண்டி விடப்பட்டு வருகிறார்கள்.

உள்நோக்கத்துடன் சீமான் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்கிறார், கமல் சிறந்த நடிகரும் இல்லை, சிறந்த அரசியல்வாதியும் இல்லை, மு.க.அழகிரியால் பாதிக்கப்படுவது திமுக மட்டுமே, மற்றவர்களுக்கு பாதிப்பு வராது!

அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க எதிர்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி” என கூறினார்.

Related articles

Recent articles

spot_img