கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக., தலைமை அறிவிக்கும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
murugan-interview-in-madurai
murugan-interview-in-madurai

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும் என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது…
தமிழக பாஜக சார்பில் 1000 இடங்களில் விவசாயிகளை சந்தித்து வேளாண் திருத்த சட்டங்களின் பலன்களை விளக்கபட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக விவசாய ஊக்கத் தொகை வங்கிகள் மூலம் நேரடியாக ரூ. 2000 வழங்கபட உள்ளது. தமிழகத்தில் திமுக.,வின் பந்த் வெற்றி அடையவில்லை. திமுக ஆட்சியில் போது 42க்கும் மேற்பட்ட விவசாயிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. 

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் விளை பொருட்களை எந்த பகுதியிலும் விற்பனை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு வேறு விதமாக பேசி வருகிறார்.

எஸ்ரா சற்குணம் ஒரு பாதிரியார். இறைவனுக்கு தொண்டு ஆற்றாமல் திமுக கூட்டங்களில் மோடியை ஒருமையில் பேசிவருகிறார். அதைக் கண்டிக்கிறோம். அதற்கு காவல்துறையினர் உரிய நடைவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும். ரூ.2500 என்பது பொங்கல் திருநாளை தமிழக மக்கள் கொரோனாவிற்கு பிறகு எந்த இடர்ப்பாடும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்று வழங்கப்பட உள்ளது. அதை வரவேற்கிறேன். முதல்வருக்கு நன்றி.

ஆளுநரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த புகார் குறித்து பரிசீலனை செய்து, அவர் எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுப்பார்… என்றார் எல் முருகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.