cell phone
cell phone

ஒரு பெண் ஊடகத்தில் பலரிடம் நட்பு கொண்டு டேட்டிங் வரவைத்து, அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

புனேவில் வசிக்கும் 27 வயதான சயாலி தேவேந்திர காலே என்ற பெண் இந்த ஊரடங்கு காரணமாக தான் வேலை பார்த்து வந்த டெலிகாம் நிறுனத்திலிருந்த வேலையை இழந்தார்.

அதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் .அதன் படி சமூக ஊடகத்தில் பல போலியான பெயரில் டேட்டிங் கணக்கை துவங்கினார். அதில் அவரின் போட்டோவை பார்த்து விட்டு பல ஆண்கள் அவரோடு டேட்டிங் வருவதற்கு துடித்தார்கள்.

அதனால் அவர் அவர்களின் சபலத்தை பணமாக்க திட்டமிட்டார். அப்படி அவரிடம் சிக்கும் ஆண்களை அவர் பல ஹோட்டல்களுக்கும் ,லாட்ஜுகளுக்கும்,மற்றும் அபார்ட்மெண்டுக்கும் வரவைப்பார். அதன் பிறகு அவர்களிடம் முதலில் கொஞ்சுவது போல் நடித்துவிட்டு , பிறகு அவர்களுக்கு தூக்க மாத்திரை கலந்த குளிர் பானம் கொடுப்பார். அதை வாங்கி குடித்து டேட்டிங் வந்தவர்கள் அதன் பிறகு நினைவற்ற நிலைக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு அந்த காலே அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்.

facebook under watch
facebook under watch

இப்படியாக கடந்த ஒரு ஆண்டில் 16 ஆண்களையும் பல பெண்களையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமீபத்தில் போலீசில் புகாரளித்தார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை பிடிக்க வலை விரித்தார்கள். அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் டேட்டிங் வருவது போல் ஊடகத்தில் தொடர்பு கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கு வைத்து அந்த காலேவை போலீசார் கைது செய்தார்கள்.

பிறகு அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான பணத்தையும், லட்சக்கணக்கனான மதிப்புள்ள தங்க நகைகளையும் போலிசார் பறிமுதல் செய்தார்கள். மேற்கொண்டு அவரிடம் ஏமாந்தவர்களை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending