யாருமே படித்துப் பார்க்காத மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கதை

பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியதுதான் கல்திரை. கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.

இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.

தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.

சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.

வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான்.

பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.

அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது.

கோவிலே பாழாக இருந்தது. அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள்.

அப்போது மரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.

அப்போது தள்ளாத வயதான ஒருசிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹ மெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார்.

உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்… உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!

48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories