
சாலையில் அடிபட்டு இறந்துகிடந்த நாயை மிதிக்காமல் யானை ஒன்று ஒதுங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
பொதுவாக தங்களின் சுய தேவைகளுக்காக விலங்குகளை தீ வைப்பது, கட்டி இழுத்துச் சென்று கொடுமைப்படுத்துவது, அடித்து கொலை செய்வது என்று பல தீங்குகள் மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையோரம் அடிபட்டு கிடந்த நாயை அவ்வழியாக பாகனுடன் சென்ற யானை, நாயை மிதிக்காமல் பின்னால் வரும் வாகனத்தை பார்த்து சாலையில் சிறிது தூரம் சென்று கடந்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
Who is more civilized? #nature pic.twitter.com/9VbDhijipy
— Arjun palwai (@DeviVar52102968) February 27, 2021