peter alphonse stalin - 2026

காங்கிரஸுக்கு திமுக., அதிக இடங்களைத் தரவில்லை என்பதற்காக இப்படியெல்லாமா கருத்து சொல்வது என்று கிண்டல் செய்கின்றனர் பீட்டர் அல்போன்ஸை.

காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பீட்டர் அல்போன்ஸ் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஒரு கருத்து இப்போது சர்ச்சையாகி வருகிறது. பீட்டர் அல்போன்ஸ் தனது டிவிட்டர் பதிவில்…

கொரோன நோய் தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் கூடுமானவரை 60 வயதுக்கு மேல் உள்ளவேட்பாளர்களை தவிர்ப்பது நல்லது. கொள்கை களத்தில் போராடவும், வென்றபின் மக்கள் பணி ஆற்றவும் இளமையின் சக்தியும் உடல் நலனும் மிகவும் தேவை. உலகம் இளைஞர்களின் கைகளில் செல்வதை உணர்க! – என்று தெரிவித்திருந்தார்.

இதனை குறிப்பிட்டுள்ள சிலர், ஸ்டாலினை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்கிறார் பீட்டர் என்று தெரிவித்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த வழக்குரைஞர் கா.குற்றாலநாதன் தமது பேஸ்புக் பக்கத்தில், ஸ்டாலினுக்கு ஆப்பு வைக்கிறாரா ? காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.பீட்டர் அல்போன்ஸ்?! தற்போது கொரோன பரவல் காரணமாக 60 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்களை தவிர்ப்பது நல்லதுகாங்கிரஸ் மூத்த தலைவர் திரு.பீட்டர் அல்போன்ஸ் கருத்து ஸ்டாலினுக்கு வைக்கிறாரா ஆப்பு? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

பீட்டர் அல்போன்ஸின் டிவீட்டும், பதில்களும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending