நீலம் தந்த அமைதி! நிரந்தரமாக்கிக் கொண்ட அண்ணாமலை!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
annamalai

முன்னாள் போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜகவில் இணைந்து அக்கட்சியின் துணைத்தலைவர் ஆனார். அவர் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

எங்கேயும் எப்போதும் புளூ சர்ட் அணிகிறார் அண்ணாமலை. தொகுதியில் பிரச்சாரத்தின்போதும், மற்ற நிகழ்வுகளின் போதும் நீல கலர் உடையினை மட்டுமே தொடந்து அணிந்து வருகிறார்.

annamalai-in-karur1
annamalai-in-karur1

இதனால் அண்ணாமலை ஏன் எப்போதும் நீல கலர் சட்டையை அணிந்திருக்கிறார்? என்ன ஸ்பெஷல்? என்ற கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து பிரச்சாரத்தின்போது அவர் அளித்துள்ள விளக்கமாவது:

‘’கர்நாடக மாநிலத்தில் நான் எஸ்.பி.யாக இருந்தபோது, இளம்பெண் ஒருவர்பாலியல் வன்கொடுமையினால் உயிரிழந்துவிட்டார்.

அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படனர்.

துர்மரணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவது வழக்கம். இளம்பெண் உயிரிழந்தது நான் பணியாற்றும் பகுதியில் வந்ததால், அவரது தாயை சந்தித்து ஆறுதல் கூறச்சென்றேன்.

edappadi and annamalai - 2026

குற்றவாளிகளை பிடித்து என் கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்று அந்த தாயிடம் நான்சொன்னபோது, ”என்மகளை திருப்பி தர முடியுமா?” என்றுகேட்டார் அந்த தாய்.

அந்த கேள்வி என் மனதை ரொம்பவே உறுத்தியது. அதனால், மன அமைதி தேடி கயிலாய மலைக்கு சென்றேன். கயிலாய மலையில் 64 நாட்கள் தங்கி இருந்தேன்.

காலை நேரத்தில் கயிலாய மலையை சுற்றி நீல நிறத்தில் வானமிருக்கும். அந்த கலர் என் மனதை கவர்ந்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அதனால் அன்று முதல் புளூ சர்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொண்டேன்” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.