images 20 - 2026

விருதுநகரில் நீரில் மூழ்கி குழந்தை பலி..

சற்றுமுன்
images 20 - 2026
#image_title

விருதுநகரில் நீரில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் ஒன்றரை வயது குழந்தை குட்டையில் மூழ்கி உயிரிழந்தது.
விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா. இவர்களுக்கு தர்ஷன்(18 மாதங்கள்) என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில், குழந்தை தர்ஷன் வழக்கம் போல வீட்டில் விளையாட்டிக் கொண்டிருந்தான்.

திடீரென அருகில் இருந்த குட்டையில் விழுந்து மூழ்கியுள்ளான். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் குட்டையில் இருந்து குழந்தையை குட்டையில் இருந்து மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விருதுநகர் ஊரக காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.