
துருக்கி துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்த சரக்குக் கப்பல் ஒன்றை செங்கடல் பகுதியில் வைத்து நேற்று ஏமனைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு கடத்தி இருக்கிறது.
இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) இதனை செய்தியாக நேற்று வெளியிட்டது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர் கப்பல் தொகுதி ஒன்று அந்த பிராந்தியத்தில் உலவிக் கொண்டு இருக்கும் வேளையிலேயே இது நடந்திருப்பதால் பதற்றம் தொற்றிக் கொண்டது.
சொல்லி வைத்தார் போல் மேற்கு கரை காசா பகுதியில் நடைபெறும் தாக்குதலுக்கு பதிலடியாக தான் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது என தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆனால் இதனை செய்தது ஏமனை தலையிடமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாத குழுவான அன்சார் ஹல்லா. அவர்களே இதனை நேற்று வெளிப்படையாக அறிவித்தும் இருக்கிறார்கள். அவர்களின் வாதம் இஃது இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்….. ஆதலால் கடத்துவிட்டோம் என்கிறார்கள்.
கிட்டத்தட்ட அவர்கள் சொன்னது ஊர்ஜிதம் ஆகியிருக்கும் நிலையில்…, இக்கப்பலை லீஸ் அடிப்படையில் இயக்குவது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்றாகும். அதில் உள்ள சரக்கு இந்தியாவிற்கு வந்து கொண்டு இருந்தது…, மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் எந்த தேசத்தவர் என்பதெல்லாம் இன்னமும் சரியாக தெரியவில்லை என்கிறார்கள்.ஆனால் கப்பல் அவ்வளவு தான் என்கிறார்கள்.
நேற்றைய தினம் இஸ்ரேல் இது குறித்து வெளி உலகிற்கு உடனடியாக தகவல் தெரிவித்தும் இதன் பொருட்டே என்கிறார்கள்.ஏற்கனவே கத்தார் அரசாங்கம் இஸ்ரேலுக்கு வேவு பார்த்ததாக சொல்லி 8 இந்திய பொறியாளர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து நிறைவேற்ற துடித்து கொண்டிருக்கிறது.
நம் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய் சங்கர் தீபாவளி பண்டிகைக்கும் ஊர் திரும்பாமல் அரபு உலக நாடுகளிலேயே தங்கி இவர்களை விடுவிக்க சட்ட போராட்டம் முதற் கொண்டு ராஜாங்க ரீதியான அழுத்தங்கள் வரை பிரயோகித்து கொண்டு இருக்கிறார். இதில் தற்போது ஹௌதி இயக்கத்தினரும் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்ரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் மேற்கு கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு விட்டார்களாம்.ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு சலித்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு ஹமாஸ் இயக்கத்தினர் ஆஸ்பத்திரியை கேடயமாக பயன் படுத்தி வந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள கட்டிடங்கள் கட்டுமானங்களை காட்டிலும் கீழே தரை தளத்தில் மிகப் பெரிய பெரிய சுரங்கங்களை உருவாக்கி வலைப்பின்னல் போல் அமைத்து வைத்திருக்கிறார்கள்.
மேற்கு கரை காசா பகுதியில் தற்போது வரை இஸ்ரேலிய துருப்புக்கள் கதக்களி ஆடிக் கொண்டு இருக்க….. அங்கு பூமிக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹில்புல்லா முதற்கொண்டு ஹமாஸ் இயக்கத்தினர் வரை களமாடிக்கொண்டு இருக்கிறார்கள் …. அல்லது அப்படி சொல்கிறார்கள். கடந்த காலங்களில் இஸ்ரேலிய மொசாட் அமைப்பினரால் கொல்லப் பட்டதாக அறிவிக்க பட்ட பலரும் தற்போதைய நிகழ்வில் உயிர்த்தெழுந்து வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதாவது இத்தனை காலமும்…. அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை காலமும் நிலவறை பதுங்கு குழியிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள் அவர்கள். அப்படி என்றால் அந்த பதுங்கு குழிகள் எவ்வளவு தூரம் தோண்டப்பட்டு எவ்வளவு தூரம் சௌகரியங்களை ஏற்படுத்தி வைத்து இருக்கிறீர்கள்
இது அத்தனையும் நெதன்யாஹூ பதவியில் இல்லாத ஓர் ஆண்டு காலத்தில் தான் இது நடந்திருக்க வேண்டும்….. இஃது ஒரு வகையில் மொசாட்டின் தோல்வி என சொல்பவர்களும் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு தற்போது இஸ்ரேலிய துருப்புக்கள் காசா பகுதியின் கடவுளான யாசர் அராபத் சிலையை புல்டோசர் வைத்து சேதப் படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்….. சமூக வலைத்தளங்களில் இது பற்றிய வீடியோ காட்சிகளும் பகிரப்பட்டு வருகிறது.
இதனை எப்படி கையாள்வது என தெரியாமல் மேற்கு உலக நாடுகள் திண்டாடி வருகிறது.
இந்த ஜோரில் அவர்கள் உக்ரைனை மறந்து விட்டார்கள்.கேட்காமலேயே கொட்டிக் கொடுத்த பலரும் இன்று…. ஜெலன்ஸ்க்கி கடனாவது கொடுங்கள் என கெஞ்சி கேட்டு கொண்டும் வாய் திறக்காமல் மௌனம் சாதித்து கொண்டு வருகிறார்கள்.
ஜோபைடன் நிர்வாகத்திற்கு நெதன்யாஹூ ஆகமாட்டார். ஆனாலும் பல்லைக் கடித்து கொண்டு இருக்கிறார் தற்போதைய நிலையில். இஸ்ரேல் வசம் அணு ஆயுத இருப்பதாக சொல்லி அதனை விசாரிக்க சர்வதேச சமூகத்தவரை உள்ளே கொண்டு வர முடியுமா என திரைமறைவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறது பைடன் நிர்வாகம். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனம் என ஒன்று இனி உலக வரைபடத்தில் கிடையாது என இஸ்ரேலிய துருப்புக்கள் உறுமிக்கொண்டு இருக்கிறார்கள்.
அரபு உலக நீட்சி மேற்கு கரையில் இருக்கிறது….. யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாத பாரம்பரியம் அது இஸ்லாமிய வலது சாரி இயக்கங்கள் இயங்கி கொண்டு இருக்கிறார்கள். மாட்டிக் கொண்டு முழிப்பதென்னவோ அப்பாவி மக்கள் தான். மஹா சிக்கலான சமாச்சாரம் இது….. ஜோபைடன் தனது தணியாத அதிகார தாகத்தால்……. ஆர்வத்தால் இதனை தொட்டிழுத்து இருக்கிறார் என்கிறார்கள் உலக அரசியல் விமர்சகர்கள்.
எல்லாம் கிடக்க……கிழவனை… கதையாக இந்திய ஆளுமைகள் தான் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு என்பவர்களும் இருக்கிறார்கள். அதாவது நம்மவர்களை இதில் இழுத்து விட துடித்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இஸ்ரேலை ஆதரிக்காத நிலையில்……. கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்ரேலை ஆதரிக்கிறது, அதாவது 2014 க்கு பிறகு… இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது என இங்கு உள்ள சில பைத்தியங்கள் பகடி செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் மேற்கு கரை காசா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஆரம்ப நாள் முதலே இந்தியா இஸ்ரேல் பக்கம் நிற்பதாக வெளிப்படையாக அறிவித்தற்கு பின்னால் வலுவான காரணங்கள்….. அரசியல் தந்திரோபாய நகர்வுகள் இருக்கின்றன.
அரபுலகம் வேறு, இஸ்லாமிய சமூகம் வேறு… அதில் பழமைவாத இஸ்லாமிய பயங்கரவாதம் வேறு…. அதுபோலவே யூதர்கள் வேறு… கிருத்துவ மிஷனரிகள் வேறு என தெள்ளத்தெளிவாக காய் நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள். இது குறித்தெல்லாம் நம்மில் பலருக்கும் விரிவான பார்வை இல்லை. ஊடகங்களிலும் இது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.தோல்பாவைகளாக சிலரது கைப்பாவையாக பல்வேறு விஷயங்கள் இங்கு நடக்கிறது என்பது தான் இன்றுள்ள நிதர்சனமான உண்மை.நாம் தான் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்…. அப்படி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாமும் பார்க்க பழகலாம்.
– ஜெய் ஹிந்த் ‘ஸ்ரீராம்’