Dhinasari Home page

விண்வெளிக்கு ஆளில்லாமல் ககன்யான் செயற்கைக்கோள் சோதனை: இஸ்ரோ துணை இயக்குனர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா

ககன்யா செயற்கைக்கோளை சோதனை முயற்சியாக, ஆளில்லாமல் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது,” என, பெங்களூரு இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா கூறினார்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், அறிவியல் திறன் போட்டி நேற்று நடந்தது.

இதில், 35 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 771 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முதலிடம் பிடித்த மாணவர் கிஷோருக்கு, 51 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த மாணவி ஜூலிஜாய்க்கு, 25 ஆயிரம், மூன்றாமிடம் பெற்ற மாணவி நிகிதாவிற்கு, 10 ஆயிரம் மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் ஆகியவற்றை, பெங்களூரு இஸ்ரோ துணை இயக்குனர் சர்மா வழங்கினார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் செயற்கைக்கோள் பணி நடக்கிறது. இதில்லாமல் மனிதர்களின்றி சோதனை முயற்சியாக, ககன்யான் செயற்கைகோளை அனுப்பி பார்க்கவுள்ளோம். அதற்கான முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.