இராமேஸ்வரம் கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை விழா!

ஆலயங்கள் சற்றுமுன் தமிழகம்
Rameswaram
Rameswaram

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்றுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.

ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயிலின் தல வரலாறு குறித்து பக்தர்களுக்கு விளக்கும் வகையில், கோயிலில் ஜூன் 18, 19ல் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடந்தது.

நிறைவு விழாவான நேற்று, ‘ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட சீதை, ராமேஸ்வரம் கடற்கரை மணலில் உருவாக்கிய சிவலிங்கத்தை தரிசித்தனர்.

அப்போது தான் கொண்டு வந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யாததை கண்டு சினம் கொண்ட அனுமான், சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை தன் வாலில் கட்டி இழுத்த போது, வால் அறுந்து விடுகிறது.

இதன்பின் அனுமான் கொண்டுவந்த லிங்கத்திற்கு முதலில் பூஜை செய்ததாக ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக நேற்று கோயிலுக்குள் குருக்கள் ஒருவர், அனுமான் வேடமிட்டு ஆடி வந்தார்.

இதன்பின் சிவலிங்கத்திற்கு மகா தீபாராதனை செய்து விழா நிறைவு பெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.