பசங்க சேட்டை செய்யிறாங்கன்னு… கைய கால மேஜையோட சேர்த்து கட்டி வெச்சி..! இன்னாங்கடா இது!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
boy beaten in school - 2026

சின்னஞ் சிறார்களின் கை கால்களைக் கட்டி… அவர்களின் பெற்றோரே விட்டுவிட்டுச் சென்றார்களாம்!

மூன்றாம், ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் அவர்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் ஒரு மேஜையோடு சேர்த்து கட்டி விட்டார்கள்.

அனந்தபுரம் மாவட்டம் கதிரி நகரில் ‘மசானம்பேட்டை’ முனிசிபல் ஆரம்பப்பள்ளியில் வியாழனன்று இந்த கொடுமை நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தச் சிறுவர்களை செய்த தவறுதான் என்ன? குறும்பு செய்கிறார்களாம். டீச்சரின் பேச்சை கேட்க வில்லையாம். அதற்குத்தான் இத்தனை பெரிய தண்டனை.

மாணவர் சங்கம் அளித்த செய்தியறிந்த எம்ஈஓ பள்ளிக் கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர் அனைவரையும் விசாரித்தார்.

students loveletter - 2026

முனிசிபல் கமிஷனருக்கு அறிக்கை அளிக்க போவதாக தெரிவித்தார் .

இந்த சம்பவம் பற்றி முதன்மை ஆசிரியர் ஸ்ரீதேவியிடம் விவரம் கேட்டபோது பள்ளியில் பிள்ளைகள் விஷமம் செய்வதாகவும் சொன்ன சொல் கேட்பதில்லை என்றும் பெற்றோர்களே அவர்களை கயிற்றால் கட்டி விட்டார்கள் என்றும் தெரிவித்தார். நாங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பெற்றோர் கேட்கவில்லை என்றார்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

மாணவர்களை கயிற்றால் கட்டி தண்டனை அளித்த செய்தியறிந்த ஆந்திரபிரதேச மாநில சிறுவர் உரிமை கமிஷன் சேர்பர்சன் ஜி.ஹைமாவதி ஆத்திரமடைந்தார்.

சம்பவம் பற்றி கலெக்டர் மற்றும் முனிசிபல் கமிஷனரிடம் கலந்து பேசினார். மேற்படி சம்பவம் பற்றி விசாரணை நடத்தி சிறுவர் உரிமை மீறலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை அடுத்து மாவட்ட ஆட்சியரின் விசாரணை அங்கே நடைபெற்றது. இந்தப் படங்கள் சமூகத்தளங்களில் வைரலானதால் பிரச்னை பெரிதானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.