மாநிலங்களவை வேட்பாளர் வாய்ப்பு என்ற அறிவிப்புக்கே… இப்படி பாலபிஷேகமா?!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
kcr milk bath - 2026

விஜயவாடாவில் கேசிஆர் போட்டோவுக்கு பாலாபிஷேகம் செய்து, யாதவகுல தலைவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தெலங்காணா முதல்வர் சந்திரசேகர ராவின் படத்திற்கு விஜயவாடாவில் பாலாபிஷேகம் செய்தார்கள் யாதவகுலத்தவர்கள். காரணம் ஒன்றுமில்லை… யாதவ குலத்தவருக்கு மாநிலங்களவையில் போட்டியிட சீட் அளித்து வாய்ப்பளிப்பதாக கேசிஆர் அறிவித்து இருந்தார்.

அதனால் யாதவ யுவபேரி தலைர்களும் ஆதரவாளர்களும் தெலங்காணா முதல்வர் போட்டோவிற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

kcr milk bath1 - 2026

யாதவர்களின் தலைவருக்கு மாநிலங்களவை சீட் அறிவிக்கும் வரை மாநில அளவில் தினமும் பாலபிஷேகம் செய்து கொண்டே இருப்போம் என்று தலைவர்கள் தெளிவுபட கூறினர்.

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு யாதவ வேட்பாளரை அறிவித்த பின் அமராவதியிலிருந்து ஹைதராபாத் வரை பாத யாத்திரை செய்து விஜயவாடா கனகதுர்கா அம்மனின் பிரசாதத்தை கேசிஆருக்கு நேரில் சென்று கொடுப்போம் என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.