தொண்டையில் அடைத்த முட்டை! மூச்சு முட்டி செத்த ‘குடிமகன்’!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
egg caused death - 2026

தொண்டையில் முட்டை அடைத்துக் கொண்டதால் குடிமகன் மரணம் அடைந்தார்.

தொண்டையில் முட்டை அடைத்து ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் ஹைதராபாத் புறநகர் இப்ரஹிம் பட்டினத்தில் நடந்தது. மது அருந்திக்கொண்டே கோழிமுட்டையை முழுவதாக விழுங்கியதால் அது தொண்டையில் அடைத்துக் கொண்டு மூச்சு விட முடியாமல் இறந்து போனார்.

யாசாரம் மண்டலம் ‘குன்கல்’ கிராமத்தைச் சேர்ந்த ‘மச்ச யாதய்யா’ (45) இப்ரஹீம்பட்டனத்திலுள்ள ஸ்ரீராமா ஒயின்ஸ் கடையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

வியாழனன்று நவம்பர் 28 இரவு வேலை முடிந்தபின் ஒயின்ஸ் கடையின் பர்மிட் அறையில் அமர்ந்து மது அருந்தினார். மது பெக் அடித்தவுடனே கோழி முட்டையை வாயில் முழுதாக போட்டுக் கொண்டதால் அது தொண்டையில் சிக்கி அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனிருந்த ஊழியர் அவரை கவனித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

யாதய்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் தொண்டையில் முட்டை அடைத்துக் கொண்டதால் மூச்சு நின்றுவிட்டது என்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.