October 27, 2021, 12:32 am
More

  ARTICLE - SECTIONS

  காதல், வல்லுறவு, கொலை! பிறந்த நாளில் இளம்பெண்ணைக் கொன்ற காமுகன் கைது!

  இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதும், பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்வதுமான சம்பவங்கள் பெருகிவருவது பெரிதும் கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இளைஞர்களுக்குக் கொடுக்கும் சமூகக் கல்வி மேம்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  young girl manasa murdered in her birthday - 1

  பிறந்த நாளன்றே இளம்பெண் மரணம். 24 மணிநேரத்திற்குள் கொலைகாரன் பிடிபட்டான் . பரபரப்பு ஏற்படுத்திய மானசா (19) கொலை வழக்கு மர்மம் விடுவிக்கப்பட்டது.

  காதல், பாலியல் வன்முறை, கொலை! பிறந்த நாள் என்ற சாக்கில் ஆசையாக அழைப்பதுபோல் நடித்து கெடுத்துக் கொன்ற காமுகன்.

  மானசாவின் உடலை மறைப்பதற்கு தன் நண்பர்களின் உதவி கேட்டு போன் செய்தான். அங்கு வந்த நண்பர்கள் நடந்த சம்பவத்தைக் கேட்டு தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்து விட்டனர்.

  வாரங்கலில் கொலைக்கு ஆளான இளம்பெண் மானசா வழக்கில் போலீசார் குற்றவாளியைக் கண்டு பிடித்தனர். சில மணி நேரங்களுக்குள் இந்த வழக்கு தொடர்பில், அந்தக் குற்றவாளியை சிறைபிடித்தனர்.

  வாரங்கல் போலீஸ் கமிஷனர் டா. விஸ்வநாத் ரவீந்தர் செய்தியாளர்களிடம் இது குறித்து விளக்கம் அளித்தார்.

  குற்றவாளியை ஜனகாம் மாவட்டம் கனபூர் மண்டலம் நெமலிகொண்டலைச் சேர்ந்த புலிபாயிகௌட் என்னும் சாயிகௌடாக கண்டறிந்தனர். குற்றவாளி ஹண்டர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு இறுதியாண்டு படிக்கிறான்.

  கொலையுண்ட மானசா, ஹண்டர் ரோடில் உள்ள நீலிமா ஜங்ஷன் அருகில் தந்தையோடு சேர்ந்து காய்கறி வியாபாரம் செய்தபடியே இன்டர் முதல் ஆண்டு படிக்கிறார்.

  ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செல்போனில் சில நாட்களாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

  நவம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை மானசாவின் பிறந்த நாள். மானசா தன்னைப் பார்க்க வர வேண்டும் என்று சாயிகௌட் கோரினான். அதனால் அந்தப் பெண் வாரங்கல் பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்று வருவதாக தன் தாயிடம் சொல்லி விட்டு மதியம் கிளம்பிச் சென்றாள்.

  அவளை காரில் அழைத்துச் சென்ற சாய்கௌட் பலவந்தமாக பாலியல் வன்முறை செய்து கொலை செய்தான். உடலை மறைப்பதற்கு தன் நண்பர்களின் உதவி கேட்டு பொய் சொல்லி போன் செய்தான். ஆனால் அங்கு வந்து பார்த்த நண்பர்கள் அங்கு இருந்த காட்சியைக் கண்டு தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கைவிரித்து விட்டனர்.

  மானசாவின் மரணத்தை இயற்கை மரணம் போல் காட்ட நினைத்த அவன், மானசாவுக்கு புது டிரஸ் வாங்கி வந்தான். ரத்தக் கறை படிந்த அவள் உடைகளை களைந்து புது உடைகளை அணிவித்து பின் இரவு யாருமில்லாத இடத்தில் உடலை வீசி எறிந்து விட்டு தன் சொந்த கிராமத்திற்கு ஓடிப் போனான்.

  hyd girl2 - 2

  ஆனால், இந்தக் கொலை வழக்கை போலீஸார் விரைவில் கண்டறிந்து மர்மத்தை விடுவித்தனர்.

  கோவிலுக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மானசா ஹனுமகொண்டா ஹண்டர் ரோடில் உள்ள விஷ்ணுப்பிரியா கார்டன்ஸ் அருகில் உயிரிழந்த நிலையில் கிடந்தாள். அப்போது, அந்தப் பெண்ணை நம்ப வைத்து திட்டமிட்டு வெளியில் வரவழைத்து பலாத்காரம் செய்து கொன்றுள்ளதாக போலீசார் கண்டறிந்தனர்.

  இருட்டிய பின்னும் மானசா திரும்பி வராததால் அவள் அண்ணன் ஸ்ரீனிவாஸ் புதன்கிழமை இரவு ஹனுமகொண்டா சுபேதார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். விசாரணை மேற்கொண்ட போலீசார் எளிதாக குற்றவாளியை நெருன்கினர்.

  இந்நிலையில், சாயிகௌடை கைது செய்ததாக வியாழனன்று வாரங்கல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாத ரவீந்தர் தெரிவித்தார்.

  இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்துவதும், பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்வதுமான சம்பவங்கள் பெருகிவருவது பெரிதும் கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இளைஞர்களுக்குக் கொடுக்கும் சமூகக் கல்வி மேம்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-