கிரீன் பெல்ட் பூங்காவில் முதியவரை தாக்கிய சிறுத்தை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
tiget - 2026

ஜம்முவில் உள்ள கிரீன் பெல்ட் பூங்காவில், சிறுத்தை ஒன்று தாக்கியதில், 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மு நகரின் காந்தி நகர் பகுதியில் உள்ளது கிரீன் பெல்ட் பூங்கா. இங்குள்ள பகுதியில் முதியவர் ஒருவரை சிறுத்தை தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது வனத்துறையினர் இருவரை சிறுத்தை கொடூரமாக தாக்கியது.

ஒருவரை சிறுத்தை தாக்கும் போது, உடனிருந்த மற்றொருவர், கம்பினால் சிறுத்தையை தாக்கினார். இதனால் அவரை விட்டு சிறிது தூரம் ஓடிய சிறுத்தை மீண்டும் தாக்க பாய்ந்து வருகிறது.

அதற்குள் வனத்துறை வாகனத்தில் ஏறி, இருவரும் உயிர் தப்பினர். 40 நிமிட கடுமையான போராட்டத்துக்கு பிறகு, மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், வனத்துறை ஊழியர்களை சிறுத்தை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்நிலையில் வனத்துறை அதிகாரி அனில் கே அட்ரி கூறுகையில், ”சிறுத்தையை வனத்துறை ஊழியர்கள் பத்திராக பிடித்து மண்டா ஜூவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது சிறுத்தை இயல்பு நிலைக்கு திரும்பி அமைதியாக காணப்படுகிறது. விரைவில் அதனை வனத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை தாக்குதலில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.